உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

275

இயல்பினராய் ஒழுகிவந்தன ரென்பதூஉம், அறிவுடையார் கூறும்

பின்னும் ஒரு செய்தியானும் நன்கு விளங்கா நிற்கின்றது. தமக்கு உணவு படைக்கும்போதெல்லாம் பரிகலத்தின் பக்கத்தே ஒரு சிறு வட்டிலில் தண்ணீரும், அவ்வட்டிற் பக்கத்தே ஒரு சிறிய ஊசியும் வைத்திடுமாறு நாயனார் அம்மையார்க்குக் கற்பித்திருந்தார்; அவ்வாறே அம்மையாரும் அங்ஙனம் வைத்தலின் காரணங்கேளாமலே தமது இறுதிக்காலம் வரையிற் செய்து போந்தனர். பின்னர்த் தமக்கு இறுதிக்காலம் நெருங்க, அம்மையார் தமதுயிர் பிரியுந் தறுவாயில், அங்ஙனம் நீண்டகாலமாகத் தாம் வட்டிலிற் றண்ணீரும் அதனண்டையில் ஓர் ஊசியும் வைத்து வந்ததும், வைத்த அவை முடிவுவரையிற் பயன்படுத்தப்படாமலே இருந்ததும் என்னை? என்றறியும் வேட்கையால் உயிர் நீங்கமாட்டாமல் தத்தளித்தல் கண்ட நாயனார், “பெண்ணே, நீ ஏன் இங்ஙனம் வருந்துகின்றனை? நீ ஏதேனுங் கேட்க வேண்டுவதிருந்தால் ஐயுறவின்றிக் கேள்!” என்று ளை தந்தனர். அச்சொற்கேட்ட அம்மையார் முகமலர்ந்து மெல்லியகுரலிற், “பெரும, வட்டிலில் தண்ணீரும் ஊசியும் பரிகலத்தின் அருகே நாடோறும் வைத்தும், அவை பயன்படுத்தப்படவில்லையே?" என வினவினர். அதற்கு நாயனார், “பெண்ணே நீ சோறிடுங்காற் சோற்றுப் பருக்கை கீழ் விழுந்தால், அதனை அவ்வூசியாற் குத்தியெடுத்து, வட்டிலின் தண்ணீரிற் கழுவிப் பரிகலத்திற் பெய்துகொள்ளுதற்காகவே அங்ஙனம் அவ்விரண்டையும் வைக்கச் சொன்னேன். ஆனால், நீ மிகவுங் கருத்தாகச் சோறு கீழே சிந்தாமல் நாடோறும் பரிகலத்திற் பெய்து வந்தமையால், அவை யிரண்டும் பயன்படுத்தப்பட வில்லை!” என விடை பகர்ந்தார்; அதுகேட்ட அம்மையார் மனநிறைவுடையராய் நாயனாரைத் தொழுத உயிர்நீங்கின ரென்ப.

கட்ட

படியே

இங்கொன்று ஆராயற்பால துளது. நாயனாரின் மனைவியார் தங்கணவர் ஏவியவைகளிற் காரணம் புலனாகாதவற்றிற்குக் காரணங் கேளாது செய்தல், பகுத் தறிவும், ஆராயும் உணர்ச்சியும் வாய்ந்த மக்கட் பிறப்பினர்க்கு ஆகுமோ? வெனின்; அதனை ஒரு சிறிது விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/300&oldid=1579926" இலிருந்து மீள்விக்கப்பட்டது