உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 11

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

“தேவர் குறளும் திருநான் மறைமுடிபும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்"

.

என்னும் ஔவையார் வெண்பாவில் வரும் முனிமொழி' என்பதற்கு 'வியாசர் எழுதிய வேதாந்த சூத்திரம்' என்று முன்னோர் உரை கூறி வந்தனர். அதற்குத் திராவிடப் பிரகாசிகை ஆசிரியர் சபாபதி நாவலர், 'முனிமொழி யும் கோவை திருவாசகமும்' என இணைத்து, அம் முனிவராவார் மாணிக்கவாசகரே என்று ஒரு கட்டுரை எழுதினார். முன்னவர்கள் கண்ட உரையே சரியானது என்று கொண்ட சோமசுந்தர நாயகர் தூண்டலால் அறிவுக் கடலில் எழுதிய மறுப்புப் பட்டுரையே இந் நூலாம். இந்நூல் நடையை நோய்ப் படுக்கையில் இருந்த சபாபதி நாவலர் படித்து, “எமக்குப் பின்னர்ச் சிறந்த உரைநடை எழுதுவார் பாராட்டினார் என்பர்.

இவரே”

என்று

இரா. இளங்குமரனார்

இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/155&oldid=1580112" இலிருந்து மீள்விக்கப்பட்டது