143
இயற்கைச் சூழல் :
1. குயிலிசை
அழகிய சிறிய மாளிகை; அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா; புல்வெளி, பூஞ்செடி, பழமரம், நிழல் மரம்; ஊடே செல்லும் நடைவழி; இத்தகைய மனங்கவர் சூழல்!
பதின்மூன்று அகவையுடைய ய ஓர் இளங்குயில்; அக்குயிலைத் தமிழ் செய்த தவத்தால் தந்த தந்தையார்! இருவரும் புல்வெளியின் ஊட டயமைந்த நடைபாதையில் உலாவிக்கொண்டே நூல் ஓதுகின்றனர்; உரையாடுகின்றனர்; இடை டை இடையே இசைக் கின்றனர். இன்னிசை :
தந்தையார் இசையில் இளங்குயில் தோய்கின்றது. தந்தையின் குரலிசை தேனில் தோய்த்தெடுத்த பலாச் சுளைபோல் இனியது அதனையும் வெல்ல வல்லது இளங்குயிலின் குரலிசை; 'யாழும் குழலும் குயிலும் திறை' செலுத்துமாம்!
"பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்” என்பது வள்ளுவம்; பண்ணிசையுடன் பாடற்பொருளும் உணர்ந்து ஓதினால் அன்றோ உள்ளம் தளிர்க்கும்! உயிரும் தளிர்க்கும்! அவ்வாறு தளிர்க்கப் பாடவல்ல தந்தையும் மகளும் அவர்கள்.
தந்தையார்
வள்ளலார் பாடிய UTL லொன்றை மெல்லென இசைக்கிறார்! அம் மெல்லியல் குயிலும் மெல்லிதழ் அசையமிழற்று கின்றது. அப்பாடல்:
“பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்