உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

179

பாடமாக இருக்கலாமா? ஆதலால் அதுவும் கட்டாயங் கூடாது. விருப்பப் பாடமாகவே இருத்தல் வேண்டும்" என்கிறார்! சூழ்ச்சியாளர் முகத்தில் கரி பூசினாலும் அம் மொழி தமிழுக்கு ஆக்கமாக அமையாமல் ஆங்கில நிலைப் பாட்டுக்கே உதவிற்று! அந்நாள் அப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர் கிறித்தவக் கல்லூரி முதல்வராகிய வில்லியம் மில்லரே ஆவர். (LD.LD.9.21.124-6).

தமிழ் விருப்பப்பாடம் என்னும் நிலைக்குத் தாழ்த்தப் பட்டமையால், தமிழ் கற்கும் மாணவர் குறைந்தனர். அதற்குத் தக ஆசிரியர் எண்ணிக்கையும் குறையத்தானே செய்யும்.

மெய்க்குருவர் காட்சி :

இறையருள் நாட்டத்தால் தமக்கொரு மெய்க்குரு வரை அடிகளார் உள்ளம் முன்னரே நாடி நின்றது. விவேகானந்த அடிகளார் இராமகிருட்டிணரைக் கண்டடைந்தது போலவும் குமரகுருபரர் மாசிலாமணி தேசிகரைக் கண்டடைந்தது போலவும் அடிகளார் குடந்தையை அடுத்துள்ள கொட்டையூரில் திருமூலர் வழிவரு இராசானந்த அடிகள் என்பாரைக் கண்டு வழிபட்டார். அவரிடம் தவநிலை (நிட்டை) பெற்றார். (21-1-1907)

மீண்டும் அவரைக் கண்டு வணங்கித் தவயோகப் பயிற்சிகளில் முற்றாக நிலைக்க வேண்டினார் (1-6-1908) ஆனால் அதற்குக் ‘காலம் வரும்' என்று கையமைத்துக் கடமையாற்றிவரக் கட்டளையிட்டார். அக் காலம் இதுவே என்பதுபோல் நிகழ்ச்சி கூடிவந்தது. அதனால் 30-4-1911 இல் வேலையை விடுத்து வெளியேறினார் அடிகளார். அவரைப் பிற கல்லூரிகள் விரும்பி அழைத்தும் ஆங்குச் சென்று பணியாற்றும் எண்ணமில்லாராய்த் தம்மை முழுமையாகத் தொண்டுக்கே ஆட்படுத்திக் கொண்டார். பின்னே இந்தி எதிர்ப்புப் பொழுதில் அவ்வெதிர்ப்பை அடிகள் விடுப்பாரானால் பெருவரு வாய்க்குரிய வேலை வாய்க்குமென்று கூறப்பெற்றும் அடிகள் அதனைக் கருதாது கடிந்துரைத்து ஒதுக்கியமையால், அவர்தம் உரிமைவேட்கையும் உண்மை உள்ளமும் ஒருங்கே புலப்படும்.

‘பூஞ்சோலை' க்குள் புகுந்து அதன் அழகில் தோய்ந்த தாம்; வீசம் ‘தென்றல் உலா' வில் திளைப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/212&oldid=1580169" இலிருந்து மீள்விக்கப்பட்டது