உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

209

கொட்டினார். அவ்வாறே 4-10-1937 இல் கோகலே மண்டபத்தில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தலைமையும் பூண்டார் ர் அடிகள்.தமிழைக் காப்பதற்காகவும் இந்தியை எதிர்ப்பதற்காகவும் நாவலர் பாரதியார் ‘தமிழர் கழகம்' என ஓர் அமைப்பைக் கண்டார். அடிகளார், “இந்தி பொது மொழியா?” என்னும் பெயரிய கருவிநூலை எதிர்ப்பாளர்க்குப் படைக்கலம் போலப் படைத்துத் தந்தார்.

இப்போராட்டத்தில் அடிகளார் ஆற்றிய தொண்டு அளவில் நில்லாமல் அடிகளார் குடும்பமே தலைப்பட்டு இருந்தது என்பது தகும். அடிகளாரின் திருமைந்தர் மறை திருநாவுக்கரசு மறியல் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக இரண்டு குற்றங்களுக்கு, ஆறு ஆறு திங்கள் தண்டனை வழங்கப்பட்டு, ஒரே காலத்தில் அமையுமாறு சிறையுற்றார். அவர்தம் துணைவியார் ஞானம்மாள் தம் ஐந்து திங்கள் கைக் குழந்தையுடன் சிறை வாழ்வுற்றார். மாணிக்கவாசகனாரின் துணைவியாரும் தம் மூன்றாண்டுச் சிறுவனுடன் சிறையுற்றார்: நீலாம்பிகையார் இந்தி எதிர்ப்பு மகளிர் மாநாட்டுத் தலைமையைப் பங்கேற்று வீறுகாட்டினார்.1937 இல் தோன்றிய கட்டாய இந்தி, 1940 இல் மறைந்தது.நாடு விடுதலை பெற்றபின் 1948 இல் மீண்டும் அரசின் சட்டத்தால் உருவாகும் நிலை உண்டாயிற்று. அந்நிலையில் 17-7- 1948 சென்னை தூயமேரி மன்றத்தில் கூடிய தமிழ் மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில், “கட்டாய இந்தியைக் கொணராதீர்” என அடிகள் அறை கூவல் விடுத்தார். அம்மாநாட்டில் திரு.வி.க. பெரியார், LD. பொ.சி; அறிஞர் அண்ணா நாரண துரைக்கண்ணனார், பாவேந்தர், அருள் தங்கையா, அறிஞர் இரா. கிருட்டிணசாமி, அப்துல் மசீது ஆகியோரும் பங்கு கொண்டனர்.

66

“இன்ன இன்ன வாய்ப்புகள் எல்லாம் செய்து, இவ்வளவு அடியுறை வைத்தால்தான் பொழிவுக்கு வருவோம்” என்று வரம்பாய் இருந்த அடிகள், இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு எதனையும் எதிர்நோக்குதல் இல்லாமல் உணர்வுப்பிழம்பாகச் செயல்பட்டமை. மொழிக்காப்பில் அவர்களுக்கு இருந்த உண்மை ஊற்றத்தைக் காட்டுவதேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/242&oldid=1580199" இலிருந்து மீள்விக்கப்பட்டது