உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

225

அடிகட்கு எல்லாப் பணிகளையும் யானே செய்ய முந்துவன்: மற்றவரும் போட்டியிடுவர். இரவில் சங்க நூல்களில் எனக்குற்ற ஐயங்களை அடிகளிடம் வெளியிடுவன். அடிகள் படுக்கையில் கிடந்து கொண்டே ஐயங்களைக் களைவர்; வேறு பல தமிழ்ப் பேச்சுக்களும் எங்களிடை நிகழும்.

ங்

மறைமலையடிகளுடன் யான் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு இரண்டு முறை சென்றேன்; நாகை முதலிய சில இடங் கட்குச் சென்றேன்; சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன்; அந்நாளில் தமிழ் வானத்தில் ஒரு திங்களென அடிகள் திகழ்ந்ததை யான் கண்டேன்.

வெஸ்லி தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு யான் முயன்ற வேளையில் தகுதித்தாள் ஒன்று மறைமலையடிகளால் வழங்கப் பட்டது. அஃது இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. அடிகளால் டி.எம்.அச்சகம் என்றொன்று அமைக்கப்பட்டது.அதைத் திறக்குந் தொண்டு எனக்குக் கிடைத்தது. அத் திறப்பு விழா சுருங்கிய முறையில் செவ்வனே நடைபெற்றது. செய்வன திருந்தச் செய் என்னும் முதுமொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓரிலக்கியம்.

யான் கல்லூரிவிடுத்து அரசியலில் தலைப்பட்டதை மறைமலையடிகள் ஆதரித்தாரில்லை. என்னைக் கடிந்தும் பேசினார். தமிழ்ப் புலவர்களில் என்னைக் கடிந்துபேசுவோர் உலகில் ஒருவர் இருக்கிறார் எனின் அவர் மறைமலை அடிகளே யாவர்........

மறைமலை அடிகள் உடல் ஓம்புவதில் கருத்தும் உடையவர்; தமது நிலையம் போதருவோரை உடலோம்பலில் மனம் செலுத்து மாறு வலியுறுத்துவர்.எனக்குஞ் சொல்வர். அடிகளின் உடலோம்பு முறைகளைக் கடைப்பிடிக்க யான் முயன்றேன். அம் முயற்சி சில மாத காலமாதல் இடையீடினின்றி நிகழ்ந்ததா? இல்லை. சில வாரக்கணக்கிலேயே அது வீழ்ந்தது. என் வாழ்க்கை வானக்கப்பலில் பறப்பது. அப் பறவைக்கு நேரம் ஏது? ஓய்வு ஏது? ஒன்றுமட்டும் நிலைத்தது அஃது எது? அஃது எனிமா அதுவும் சென்னையிலேயே!

6

மறைமலையடிகளிடத்தில் பலவித நல்லியல்புகள் உண்டு. அவைகளுள் சிறந்த ஒன்று இரக்கம் - ஜீவகாருண்யம். அடிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/258&oldid=1580215" இலிருந்து மீள்விக்கப்பட்டது