உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்

vii

தனித்தமிழியக்கங் கண்ட தவச் செல்வர்!

சமுதாயத்

அடிகளார் தம் நுண்ணுணர்வால் தோற்று வித்த தனித் தமிழியக்கமானது தமிழ் மக்களது சமயத்துறையிலும் துறையிலும் அரசியற்றுறையிலும் நன்கு கவடுவிட்டுக் கிளைத்து நற்பயன் தருஞ் செவ்வியினைக் கண்கூடாகக் கண்டு மகிழும் பேறு நமக்குக் கிடைத்துள்ளது. அடிகளா ரவர்கள் எல்லையில்லாத பேரருட்கடலாகிய முழுமுதற் பேரன்புபூண்டு

கடவுளிடத்துப்

எவ்வுயிர்க்கும் அன்புடையராயொழுகிய அருட் சல்வராவார்.

திருவருளின் துணைகொண்டு 'திசையனைத்தின் பெருமை யெல்லாம் தென்றிசையே வென்றேற அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லத் தமிழன்னையின் திருக்கோயிலுக்குக் கடைகாலமைத்து விட்டார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கு அடிகளாரமைத்த அடிப்படை யினை நன்குணர்ந்து தமிழ்மொழிக்குப் பல துறை களிலும் தொண்டு புரிவதே தமிழ்ப் பெருந்தகையார் மறைமலையடிகளார்க்கு நாம் செய்தற்குரிய நன்றி நிரம்பிய வழிபாடாகும்.

வித்துவான் க. வெள்ளைவாரணனார்

அண்ணாமலைநகர். (பக். 41)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/8&oldid=1579965" இலிருந்து மீள்விக்கப்பட்டது