உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

இருவே றாக்கி ஒருபாலில்

நீதான் இருக்க இசைவிலையென் றுருகா வரைந்த தென்? அணங்கே! உன்முன் பிறந்தான் யான்மடிய அருகாதிக்க மாட்டானால்

அச்சந் தவிர்க அருளமுதே!

மாறாத காதலுடையார்க்கு மாறாயிம் மண்ணகத்தே ஊறான செய்வார் உருகாத நெஞ்சுள்ள ஒன்னலரே; வேறாக நின்னை நினையாத அண்ணலென் வெள்ளையுள்ளங் கூறாய் அழிய ஒரு காலும் பாராக் குணத்தினனே.

87

அம்பிகாபதி : நயினா! நீ பாட்டுப் பாடுவதிலும் வல்லவனாகவே யிருக்கின்றாய். நீ இயற்றிய இச்செய்யுட்கள் இனியனவாகவே யிருக்கின்றன. இவற்றைக் கண்டு என் தங்கை மிக மகிழ்வள். நீ மனச்சோர்வகற்று. முன்போலவே நீ என் இல்லத்திற்கு வந்து என் தங்கைக்குப் பாடங் கற்பித்து வா, என் தந்தையார் வந்தபின் என் தங்கையை நினக்கு மணஞ் செய்விக்க முயற்சியெடுப்பேன்.

என்

நயினார் : அம்பிகாபதி! என் ஆருயிர்த் துணைவ. நினது பேரன்பிற்கு எங்ஙனம் நன்றி செலுத்தவல்லேன்! னுயிரின் ஒரு பாதியை நீயும் மற்றொரு பாதியை நின் தங்கையு மே அடிமையாய்க் கொண்டு விட்டீர்கள்! (அம்பிகாபதி தன் நண்பன் கையைப்பிடித்து ஒற்றிக்கொண்டு போய் விடுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/120&oldid=1580722" இலிருந்து மீள்விக்கப்பட்டது