உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ LDMMLDMOLD-12 →

காதலர் அக்கோயிலண்டையில் வந்திருந்து நூலேணி வழியே மதிலைத் தாண்டி இங்கு வருவர். நிலவு பட்டப் பகல் போல் எவ்வளவு தெளிவாய் எரிக்கின்றது பார்! வா! போவோம்.

(இருவருங் குறித்த இடத்திற்குச் செல்கின்றனர்)

அமராவதி : (வழியில்) என்னடியம்மா நீலம்! எனக்கு அச்சமாயிருக்கிறதே! இளைஞரான நம் ஆசிரியர் இந் நள்ளிரவில் அக்காளிகோயிற் பக்கத்தே வருவதை நினைக்க என் நெஞ்சம் நடுங்குகின்றதே!

தோழி : (சிரித்துக்கொண்டு) அம்மம்ம! கணவனைக் கூடா முன்னமே நீ அவர்மேல் உயிரை விடுகின்றனையே! அவரைக் கூடிவிட்டால் நீ என்னைக்கூட மறந்து விடுவாய் போல் தோன்றுகின்றதே! ஒன்றுக்கும் அஞ்சாதே! நின் கணவனும் அவர் தந்தையும் இக்கோயிற் குருக்கள்; அதனாற் காளி நின் கணவற்குத் தீங்கேதுஞ் செய்யாள்.

அமராவதி : நம் முன் ஆசிரியர் கம்பரல்லரோ காளி கோயிற் பூசகர்? அங்ஙனமானால் இவர் யார்?

தோழி : கம்பர்மகன் அம்பிகாபதிதான் இப்போதிங்கு வரும் நின் காதலர்.

அமராவதி :

என்ன முற்றவஞ் செய்தனென் ஏடீ!

எளிய னேனுயிர்க் கொழுநனா விந்த மன்னர் ஏத்திடு மாண்கலை வல்ல

மதியினானைமான் மகனனை யானைக் கன்ன லென்னவென் கட்கினி யானைக் கருத்தி லூறுதீங் கனியென நாவிற் பன்ன வல்லவென் பாவல வேந்தைப் பரவி யானுறப் பகர்ந்திடு பாங்கீ!

இறவாத அன்பினனை யான் விழைந்த எழிலானைப் பறவாத கிளியனையாய்! பரிந்தெனக்கு நல்கினையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/145&oldid=1580747" இலிருந்து மீள்விக்கப்பட்டது