உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் 12

நினக்குப் பிறக்கும்; நின் ஆருயிர்த் தோழி தோழி நினக்கு அவ்வழியினைக் காட்டுவான்.பதறாதே! அமைதியாயிரு.

(தோழி அம்பிகாபதியுடன் வந்து)

தோழி : இளவரசியார்க்கு வணக்கம். ஆடவர் அணுகப் பெறாத இவ்வரண்மனைக் கன்னிமாடப் பூங்காவில் இந் நள்ளிரவில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த இக் கள்வரைத் தங்களிடம் இதோ பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றேன். இவரை எப்படி ஒறுக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ அப்படியே செய்யுங்கள்!

அமராவதி : நல்லது, இவரது வாய்ப் பிறப்பைக் கேட்டு இவரைச் சிறை செய்து வைக்கிறேன்; நீ போய் விடியும் முன்னமே இங்கு வா!

தோழி : (புன் சிரிப்புடன்) அப்படியே அம்மணி! (வணங்கிப்போய் விடுகிறாள்)

அமராவதி : ஐய நீர் யார்? இக்கன்னிமாடப் பூங்காவில் இந்நள்ளிரவில் நீர் வந்தது பெருங்குற்றமன்றோ? எதற்காக ங்கு வந்தீர்? உடனே சொல்லும்!

ஒரு

அம்பிகாபதி : ஆம், அரசி! எங்குமில்லாத பேரழகு வாய்ந்த பண்மான் த்தோட்டத்தின்கண் உளதென்று கேள்வியுற்று அதனைப் பிடிக்கவே இவ்வளவு அல்லற்பட்டு இங்கு இந்நள்ளிரவில் வந்தேன், பெருமாட்டி!

அமராவதி : ஆ! அங்ஙனமாயின் அதனைக் கண்டு

பிடித்தீரா?

அம்பிகாபதி :

தேனொக்கும் இன்மொழியாள் தேராத

என்நெஞ்சிற் றிகழ் கின்றாளை

மானொக்கும் என்றெண்ணி மற்றதனைக்

கவர்தற்கு வந்தேன் மின்னே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/147&oldid=1580749" இலிருந்து மீள்விக்கப்பட்டது