உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் 12

நயினார் : காவேரி, அமராவதி, தங்கம் என்னும் இவர் மூவரில் எவர் மற்றையிருவரிலும் மேம்பட்ட வனப்புடையர் என்பதை நன்காராய்ந்து சொல்வையா?

அம்பிகாபதி : என்னாலியன்ற மட்டும் எண்ணிப் பார்த்துச் சொல்கின்றேன், கேள்!

மதியினெழிலும் பிறையின் வடிவுங்

காரறலின் வனப்பும் மயிற்றழையிற் பொதியும் பொலிவுங் குமிழி னுருவும் போர்ச்சிலையின் வளைவும் புகழ்ப்பவள முதிருந் துணியின் சிவப்பும் முருந்தின்வால் வெளியே வொளியும் முகிழமரா வதியின் உருவம் பசும்பொற் படிவம் வாழுயிரோ டுலவும் வகையினதால்

உயர்ந்துநிமி ருடம்பின்கண் உருத்தெழுந்தே ஒளிர் கொங்கை உடையைக் குத்திப் பெயர்ந்துநடத் தொறுமவடன் சிற்றிடைக்குப் பெரிதுமிடர் பெயுங்கொ லென்று மயர்ந்திடைமேன் மணியரற்ற மருண்மானின்

நோக்கமொடு மயங்கி நிற்பாள்

அயர்ந்த மனத் ததுகண்ட அடியேனும்

அவ்வழகில் அமிழ்ந்தி னேனால்

நயினார் : நல்லது, தங்கத்தின் அழகைப் பற்றி யாது

சொல்வை?

அம்பிகாபதி: சிறிது சொல்கிறேன்.

கொங்கப்பு மலர்க்குழலோ குளிர்காலத் கரும்புயலோ கொழுவி தாகப் பொங்கற்றை மரைமலரோ புதுமுகமோ புரள்கயலோ பொருந்து கண்ணோ அங்குற்ற விளங்குமுகை அழகியமூக் கெனவருமோ அரிய முத்தந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/189&oldid=1580801" இலிருந்து மீள்விக்கப்பட்டது