உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமெல்லாம் கற்றலும், கற்ற கருத்துகளில் உள்ள மாசு

மறு நீக்கி மணியான நூல்களாகவும், மேடைப் பொழிவுகளாக வழங்கலும், நோன்பு எனக் கொண்டவர் மறைமலையடிகளார். அவ்வகையில் வரும் இழப்பு, எதிரீடு இவற்றைப் பொருளாக எண்ணாமல் துணிந்து நின்றவரும் அவர். அடிகளார் வரலாறு அவரவர் மொழித் தூய்மைக்கும், மொழித் தொண்டுக்கும், மாந்தநேய உணர்வுக்கும், உயிரிரக்க மெய்யுணர்வுக்கும் வழிகாட்டும் என்பது உறுதியாம்.

- இரா. இளங்குமரன்

தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக இலக்கிய ஆராயச்சித் துறையில் விளங்கிய அடிகளாரது எழுத்துநடை கற்கண்டு அனைய கன்னித் தமிழ்நடை; ஏறுநடை; வீறுநடை; ஆய்வுத் திறத்திற்கு மிகு சுவை கூட்டிய தனிநடை என்று கூறுவது முற்றிலும் உண்மை; புனைந்துரையன்று.

- டாக்டர் சொ. சிங்காரவேலன்

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/322&oldid=1581953" இலிருந்து மீள்விக்கப்பட்டது