உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் 12

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

அடிகளார் நாடகமாக எழுதிய நூல் இது. அவர் வாழ்ந்த காலத்தில் நூல்வடிவு பெறாமல் 1954 இல் கழகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு ஐந்து ஆ ண்டுகளின் முன் (1949) அடிகளார் எழுதிய நாடகம் இது. இதுவே அடிகளார் இயற்றிய இறுதி நூல்.

புலவர் புராணம், புலவர் வரலாறு

ஆகியவற்றில் சொல்லப்படும் கம்பர் மகன் அம்பிகாபதிக்கும், அமராவதிக்கும் ஏற்பட்ட காதல் அதன் துன்பியல் முடிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வரைந்த துன்பியல் நாடகம் இது.

ஐந்து நிகழ்வுகளும் 30 காட்சிகளுமாக நாடகம் யல்கின்றது. வடமொழிப் பில்கணீயக்கவியும்,

அவன் மாணவியும், ஒளியிழந்தவனாகவும்

நோயுடையளாகவு ம் மறைத்துக் காட்டப் பட்டதும், வெண்மதி பற்றி அவன் பாடியமையால் உண்மை வெளிப்பட்டு அவர்கள் காதலர் ஆகியதும் போன்ற அமைப்பை இந்நாடகத்தில் மேற் கொள்கிறார். ஆங்கில நாடக உத்திகளையும் அடிகள் மேற் கொண்டு நாடகத்தை இயக்குகிறார். இறுதிக்காட்சி முழுவதும் அவலமாய் உணர்வை உருக்குகின்றது.

இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/35&oldid=1580576" இலிருந்து மீள்விக்கப்பட்டது