உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

vii

தமிழர் தவச் செல்வர்!

தமிழ் இலக்கியங்களில் காலம், பொருள் முதலிய கூறுகளை ஆராயும் முறை ஆங்கில நாட்டு முறையை அடியொற்றி வருவதொன்று. காலம் பற்றியும் ஒப்புமை பற்றியும் (Historical method and Comparative method) ஆராய்ச்சி நிகழும். இதனை முதற்கண் தமிழ் இலக்கியத்துறையுட் புகுத்தி இனிய உரையில் எழுதிக்காட்டிய பெருமை அடிகட்கே உரியதாகும். இவ்வாராய்ச்சிக்கு நாட்டின் சமய சமுதாய அரசியல் வரலாறு பற்றிய அறிவு அடிப்படையாக வேண்டுவதொன்று. இதனைத் தமிழ் வகையில் ஆராய்ந்து தமிழ் நாட்டுத் தமிழ்மக்களின் அரசியல், மொழி, சமயம், ஒழுக்கம் முதலியவற்றின் வரலாறுகளை ஆராய்ந்து அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுதிய கட்டுரைகளும் பலவாகும். மாணிக்க வாசகர் வரலாறும் காலவாராய்ச்சியும் என்ற பேருரை நூல், மாணிக்கவாசகரைப் பொருளாகக் கொண்டு எழுந்ததெனினும் அதன்கண் தமிழ் நூல்கள் பலவற்றின் காலமும் கருத்தும் ஆராய்ந்து காட்டி அறிஞர் பலரை அத்துறையில் ஈடுபட்டுச் சிறப்புறச் செய்தவகையில் அடிகள் தமிழிலக்கிய ஆராய்ச்சிநெறித் தந்தையாகின்றார்.

ஒளவை. சுகு. துரைசாமிப்பிள்ளை

அண்ணாமலை நகர். (பக். 43)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/8&oldid=1580436" இலிருந்து மீள்விக்கப்பட்டது