உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

139

ஆனால் அக்கன்னிப்பெண்ணோ மும்முரமில்லாத எண்ணங்களும் விரையாத குணமும் உடையவளாய் இருந்ததனால் சிறிது பற்றுதலுணர்வு மாத்திரங் கொள்ளப் பெற்றாள். தன் புத்தப்புதிய இளம் பருவ உணர்வுகளினிடையே மனித இயற்கையில் நம்பிக்கை கொள்ள விழைந்த ஒருத்திக்கு அந்த நம்பிக்கை, நீலலோசனனிடத்தில் ஆனதுபோல, அவ்வளவு கொடுமையாக அதிர்ச்சி பெறு மானால், அல்லது அழிக்கப்படுமானால் பின்னும் அது வருத்த மாகவேயிருக்கும். ஆகவே, அங்ஙன மானதுபற்றி அவள் புலம்பியது ஒரு வியப்பன்று. பயங்கரமான நல்லான் தன்னோடு வழிப்பயணம் வந்ததைப்பற்றி நினைக் கையில் உண்டான திகிலினும் வியப்பினும் வேறாக, அவன் அத்தனை இளைஞ னாய் வசீகரநோக்கம் வாய்ந்தவனாய் இனிய நடை யுள்ளவனாய் உள்ள ஒருவன் திகிலையுங் கலவரத்தையுந் தரும் செய்கை யுடையவன் ஆயதை நினைக்கும் போது தான் மனவெழுச்சி குன்றுவது ஒரு வியப்பன்று.

வியாக்கிரவீரனையும்

னிக் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் தம் வழியே சல்வதை விடுத்துச் சிறிதுநேரம் படிப்பவர் கவனத்தை மற்ற விஷயங்களுக்குத் திரும்புகின்றோம். இந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்னே முதலாக நீலலோசனனிடம் திரும்பு வோம்- குமுதவல்லியைப் பிரிந்தபிறகு அவனையும் அவன் துணைவர் கேசரிவீரன் துப்புக் கெட்ட அச்சத்திரத்திலே விட்டு வந்தோம். அப்பௌத்தர் மூவரும் தங்குதிரைகளை லாயத்துக்குள் விட்டபிறகு அத்தனை எளிமை யான அவ்விடத்திற் கிடைக்கக்கூடிய உணவை உண்பதற்கு உட்கார்ந்தார்கள். என்றாலும், நீலலோசனன் சிறிதே உண்டான்- அஃது அம்மிதமான உணவு தனக்குச் சுவைப்படாமையால் அன்று, ஏனெனில் செழுமையான அல்லது சுவைமிக்க உணவிலே அவன் அவா உடையவன் அல்லன்- ஆனால் அவன் உள்ளத்தில் குமுதவல்லியின் அழகிய வடிவம் நிறைந்திருந்த தனாலேயாம். பரவசப்படுத்தும் அத்துணை அரிய அழகினை இதற்குமுன் அவன் கண்கள் எங்கும் பார்த்ததே இல்லை; தன் காதினுள் மெல்லெனப்புகுந்த அல்லது தன் நெஞ்சத்துள் முழுதும் ஆழ இன்னிசை பொழிந்த அவ்வளவு இசையினினிய குரலினை அவன் இதற்குமுன் கேட்டதே யில்லை. அவர்கள் அந்நாளில் எதிர்ந்த இனிய கூட்டுறவைப்பற்றிக் கேசரிவீரனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/168&oldid=1581435" இலிருந்து மீள்விக்கப்பட்டது