உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

  • மறைமலையம் - 13

மாறாக வேறு ஒருவரை எதிர்ப்படும் நம்பிக்கையால் ஓடி வந்தனனோ? இவையெல்லாம் நமது கதையில் போகப்போக விளங்கும் குமுதவல்லி வந்ததனால் இவனிடத்திற் சடுதியில் உண்டான மனக்கலக்கத்தை அவள் பாராதபடி மறைத்துவிட அவ்வளவு எளிதிலே தன்னிடத்தில் வேறொருவகையான பார்வையை வருவித்துக் கொள்ளவாவது அன்றித் தன்னை விரைவில் அமைதிப்படுத்திக் கொள்ளவாவது இளைஞனான சந்திரன் மாட்டாதவனா யினான் என்று கூறுதல் இவ் விடத்திற்குப்போதும். சந்திரனுடைய உண்மையைப் பற்றியும் நம்பகத்தைப் பற்றியும் குமுத வல்லியின் மனத்தில் ஏற்கனவே எழுந்த ஐயமானது முற்றும் உறுதிப்படாவிட்டாலும் ஒரு நொடியில் வலுப்படுவதாயிற்று; ஆகவே, மீனாம்பாள் வாயிலி ருந்து தத்தளித்துவந்து தன் செவியிற்பட்டது சந்திரனு டை ய பெயரே என்றும், ஆகையால் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது சக்திகளிடத்திலேயே சக்திகளிடத்திலேயே என்றும் குமுதவல்லி பெரும்பாலும் உறுதிகொண்டாள்.

குமுதவல்லி தான் அகப்பட்டுமீண்ட ஆபத்துக்களால் மிகுந்த எச்சரிக்கையோடும் முன்னறிவோடும் இருக்கவேண்டும். அவசியத்தைக் கற்றுக்கொண்டாள்; தனது சமுதாயத்திற்குச் சந்திரன் இடமாயிருக்கிறான் என்பதைக் காட்டாமலிருக்க அவள் தீர்மானித்துக் கொண்டாள்; ஏனெனில், அது தெரிந்தால் அவன் மிகவும் எச்சரிக்கையுடையனாகித், தனது உபாயம் ஏதுவா யிருப்பினும் அதனைக் கண்டுபிடித்தற்கு நிரம்பவும் அருமை யான இரகசியத்தில் மூடிவைப்பனென அஞ்சினாள்.அதுவல்லா மலும், குமுதவல்லியின் தயாள குணமானது தன்னையொத்த ஒருசீவகனிடத்து ஆன்றகாரணங்கள் இன்றித் தப்பெண்ணங் கொள்ளப்புகுதலைத்தடுத்தது; அதுவன்றியும் சந்திரனுக்கு எசமானரான மனோகரர் தனக்கு உற்றநண் பராகவுங்கூடுமென நினைக்கலானாள். ஆகவே, தான் நீலகிரி நகரில் இருக்கும் வரையில் அந்தப்பணக்கார வியாபாரியின் வீட்டின்கண் அச்ச மின்றிப் பத்திரமாயிருக்கலாமென்று கருதினாள்; இன்னும் வேண்டுமானால், சந்திரன் ஊழியம் புரியும் எசமானரிடத்தில் சந்திரனுக்குள்ள உண்மையைப்பற்றி அவன் தான் ஐயுறவு கொள்ளுதலையும் எளிதிலே சொல்லக் கூடுமென்று

எண்ணினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/223&oldid=1581496" இலிருந்து மீள்விக்கப்பட்டது