உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

அத்தியாயம் - 15 செய்திவிளக்கத்தின் முடிவு

ஆம், நாகநாட்டரசியின் எண்ணங்களும் உணர்வுகளும் புதுமையாகவே இருந்தன; ஏனெனில், மனோகரர் கடைசியாகச் சொல்லிய சொற்களானவை, தான் முன்னே கேள்வியுற்ற சிலவற்றோடு சேர்க்கையுடையவாதலை அவள் உள்ளத்தில் தடுக்கக் கூடாதபடி எழுப்பி விட்டன. தம் சொற்களைச் செவி மடுப்பவர்களுக்குப் பொழுதுபோக்காக இருத்தற் பொருட்டும், அவர்களுள்ளத்தைக் கவருதற் பொருட்டும் கதைசொல்லுவார் வழக்கமாய்ப் பிணைத்துச் சொல்லுகின்றகதைகளைப்போல் நுணுக்கமாய்ச் சூழ்ச்சிசெய்த புதிய கட்டுக்கதைகளைப்போல் அல்லாமல் திகழ்கலை தனக்கும் மீனாம்பாளுக்கும் எடுத்துரைத்த கதை திட்டமாய் நடந்ததனை அடியாகக்கொண்டு உண்மையாய் இருக்கலாமோ? என்று எண்ணினாள். திரும்பவும் மனோகரர் பேசப்புகுந்தமையால், குமுதவல்லி இங்ஙனம் நெடுநேரம் எண்ணமிட்டுக் கொண் டிருக்கக் கூடவில்லை.

“ஆம், அம்மாமறைப்பொருளை அவர் தெரியப்பெற்ற தற்காகத்திருவருளை வாழ்த்துதல் வேண்டும்; அம்மாட்சிமை மிக்க முதிய அரசர் மேற்கணவாய்மலைகளின் இடையே அமைதியும் காவலும் வாய்ந்த ஒரு புகலிடம் அடையப்பெற்றார். அங்கே அவரை நான் அவ்வப்போது போய்ப் பார்த்து வந்தேன். இரண்டுமூன்று ஆண்டுகள் கழித்து அவர்தமது நாகநாட்டரசி தம்மவர்க்கே திருப்பிக்கொடுக்கப்பட்ட தென்பதனைத் தெரிந்தபின், மனம் ஆறுதல் எய்தித் தாம் உலகைத் துறந்து வந்ததில் முற்றும் கருத்தொருப்பட்டு, நாகநாட்டலுவல்களில் இனித்தாம் தலையிடுவதில்லையென்று அப்பகைப்படைத் தலைவனுக்குத் தாங்கூறிய உறுதிமொழியை முன்னிலும் மிகுதியாக மதிப்பதற்குத் தீர்மானித்தார். என்னைப் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/274&oldid=1581552" இலிருந்து மீள்விக்கப்பட்டது