உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் – 13

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

புதுமைப் புலவர் புதினப் புலவரானார். 'பூத்துத் தோன்றும் புதினக் கலைகளைப் புலவர்கள் கூர்ந்து கண்டு நூல்களைப் படைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தும் அடிகளார் தாமே முன்னோடியாகி இப்புதினக்கலையில் புகுந்தார்.

தமிழ்மண்ணில்

கதை வடிப்புகள் இருந்தாலும் இஃதொரு தனிக்கலையாகப் பிறப்பெடுத்தது மேலை நாட்டில்தான். 'நாவல்' என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் 'புதுமை' என்று பொருள். 17-ஆம் நூற்றாண்டின் இத்தாலி நாட்டு அறிஞர் தானியேல் தீபோ என்பார் இப்புதுமையை முதலில் படைத்தார். இவரை இக்கலையின் தந்தை என்பர். இக்கலையையே நாம் புதினம் என்று தமிழில் இப்போது வழங்குகின்றோம்.

அடிகளார் இப்படைப்பை வடிக்கவேண்டுமென்று முனைந்து இரண்டு நூல்களைப் படைத்துள்ளார். ஒன்று குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி' என்ற ஆங்கிலப் புதினத்தின் தழுவல். இரெயினால்டுஎழுதிய ஆங்கில நாவல் இது. இது தம் கோட்பாடு கொள்கைகளைக் காட்டி எழுத வாய்ப்பாக இருந்ததை உணர்ந்து வடித்தார். தமிழர்மதம் நீண்டகாலத் துயில் நீக்க க்க லையின் எழுதுவதாகக் குறித்துள்ளார்.

66

6

'நல்லோர் துன்புற்று இன்புறுவர்; துன்பம் இழைப் போர் துன்புறுவர்; உயிர்ப்பலி அதிலும் மாந்தப்பலி கூடாது; காதலர் கூடுவர்; காதல் பூண்டோர் கடவுள் நிலையையும் பெறுவர்; நல்லாட்சி கண்டோர் வேற்றுக் கட்சியை விரும்பார்' என்னும் கருத்துகளின் பொதிவு இப்புதினம். டையிடையே தம் கோட்பாடுகளாகிய சிவம், சித்தாந்தம், தமிழர் பண்பாடு, தனித்தமிழ் வளர்த்தல் முதலியவற்றையும் விவரமாக வைத்துள்ளார். இதனைத் தமிழ் மரபில் கொண்டுசெல்வதை நூலின் பெயரே அறிவிக்கிறது. இதனை ஓர் 'அறநெறிப் புதினம்' எனலாம்.

6

கோவை இளஞ்சேரனார் தமிழ் மாமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/31&oldid=1581285" இலிருந்து மீள்விக்கப்பட்டது