உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்ந்து பரந்த படிப்பு, கூரிய அறிவு, ஆராய்ச்சித் திறமை,

சொற்பொழிவாற்றும் ஆற்றல், கடவுள் அன்பு, அஞ்சா நெஞ்சம், சைவத்திலும், தமிழிலும் ஆறாத பற்று இவற்றை உடையவர் மறைமலையடிகள். இவருக்குத் தமிழறிவோடு, வடமொழியறிவும், ஆங்கில அறிவும் இருந்தன. மற்ற மொழிகளில் இவருக்கு இருந்த அறிவை இவர் தமிழ் ஆராய்ச்சிக்குக் கருவியாய்ப் பயன்படுத்தினார்.

- கி.வா. சகநாதன்

உம்பருலகெய்திவிட்ட அடிகளார் நம் செந்தமிழ் மொழிக்குச் செய்துள்ள அரும்பெரும் பணிகள் அளவிடற்பாலன; பண்டைப் பெருநூல்களின் நலன்களை இன்றைய அறிவாராய்ச்சி முறைக் கருவி கொண்டு எடுத்துக் காட்டியும், தனிப்பொலிவும், இன்பமும் பொதுளிய தீந்தமிழ் நூல் பல வெளியிட்டும் அவர்கள் தமிழை வளப்படுத்தி யுள்ளார்கள். இந் நாளில், தமிழ் நூலாராய்ச்சி முறைக்கும், திருந்திய செந்தமிழ் உரைநடைக்கும் அவர்கள் சிறந்த வழிகாட்டியாய் இருக்கின்றார்கள்.

- ச. சச்சிதானந்தம் பிள்ளை

உழை

உயர்

உதவு

தமிழ்மண்

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/330&oldid=1581932" இலிருந்து மீள்விக்கப்பட்டது