உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இரண்டாம் பதிப்பின் முகவுரை

வ்விரண்டாம் பதிப்பின்கட் செய்திருக்கும் சீர்திருத்தங்கள் சில: முதற்பதிப்பின் இடையிடையே கலந்திருந்த வடசொற்கள் அத்தனையுங் களைந்தெடுக்கப்பட்டு இது தனித் தமிழாக்கப் பட்டிருப்பதும், இடையிடையே சில சொற்களுஞ் சொற்றொடர்களும் முன்னையிலும் இப்போது சுவை மிகுந்தனவாக மாற்றப்பட்டிருப்பதும் பிறவும் அங்ஙனஞ் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகும். இப்பதிப்பையும் முதற் பதிப்பையும் ஒத்துநோக்கிப் படிப்பவர்க்கு வடசொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் இவையென்னும் அறிவுஞ் செந்தமிழ் உரைநடையை மேன்மேல் அழகுஞ் சுவையும் முதிர எழுதும் வகையும் நன்கு விளங்கா நிற்கும்.

- மறைமலையடிகள்

1942

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/36&oldid=1581290" இலிருந்து மீள்விக்கப்பட்டது