உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மறைமலையம் -14

யான் அப்பதினைந்து நாட்களுக்குப் பின் வந்து அவ்விரிவுரை யினைச் செய்து திரும்பலாம். விரிவுரைப் பொருளும் இன்னதாக இருக்கவேண்டு மென்பதனையும் தெரிவியுங்கள்.

தங்கள் நலத்தையும், தங்கள் அருமை மனைவியார் குழந்தைகளின் நலங்களையும் கோரித் திருவருளை வழுத்தும்.

அன்புள்ள,

7 தமிழ்த்தொண்டு

மறைமலையடிகள்

3-1-40

திருவாளர்... அவர்களுக்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக!

நலம். யாங்கள் காரைக்காலுக்குச் சில நாட்களுக்கு முன் வந்தபோது எங்களை நீங்கள் அன்புடன் வரவேற்று விருந்தோம் பியதை நாங்கள் என்றும் பாராட்டி மகிழும் கடமை உடையவர் களாயிருக்கிறோம். நாங்கள் இங்கு வந்து சேர்ந்து தமிழ்த் தொண்டு சிவத் தொண்டை எப்போதும் போலச் சிவபெருமான் திருவருளை முன்னிட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இந்தப் பக்கம் வரும்படி நேர்ந்தால் எமது நிலையத்தை வந்து பார்க்கும்படி கோருகிறோம்.

உங்கள் எல்லார் நலங்களையும் கோரித் திருவருளை வழுத்தும்.

அன்புள்ள,

8 - எனது வணக்கம்

மறைமலையடிகள்

4-1-50

அன்புடையீர்,

எதிர்பாராத வகையாக யான் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் பார்த்து ஒருநாளாயினும் அளவளாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/329&oldid=1582638" இலிருந்து மீள்விக்கப்பட்டது