உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் தமிழுக்குப் புத்துயிரும், புதுவாழ்வும் அளித்தார். தமிழுக்கும், தமிழருக்கும் இவர் ஆற்றிய தொண்டு தலைசிறந்தது.

டாக்டர். க. கணபதி பிள்ளை

தமிழ்மொழி தனித்தியங்கவல்லது என்பதைத் தங்கள் எழுத்தாலும், பேச்சாலும் உலகறியச் செய்த பெருமை மறைமலையடிகளுக்கே உரியது. நாட்டில் “மறைமலையடிகளார் நடை” என ஒன்று உருவெடுத்துத் தோன்றி பரவியுள்ளது. எனவே அடிகள் “தனித்தமிழ் நடையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

- டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார்

அடிகளார் தம் ஆராய்ச்சி நூல்களில், தமிழ் மரபையும் பண் பாட்டையும் விளக்குவதோடு அவற்றிற்கு மாறான கருத்துக்கள் எந்த நூலில் இருப்பினும், எந்தப் புலவர் கூறி இருப்பினும் அவற்றை எடுத்துக் காட்டிப் புறக்கணிக்கும் இயல்பினர். நல்லதைப் போற்றி அல்லதைக் கடிதல், உயர்ந்ததைச் சிறப்பித்துத் தாழ்ந்ததை ஒதுக்குதல், உண்மையைத் தழுவிப் பொய்ம்மையை விலக்குதல் - ஆகியவை அடிகளாரின் தனித் தன்மை களாகும்.

- மு. வை. அரவிந்தன்

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/354&oldid=1582677" இலிருந்து மீள்விக்கப்பட்டது