உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் -14

பாடுவனவாய் அருகிவருமே யல்லாமல், நாடகங்களிற்போலப் பெருவரவின வாய்ப்புகுவன வல்ல. இதுவேயுமன்றி,நாடகங்களில் அவற்றை யியற்றும் ஆசிரியன் உரையாகத் தொடர்ந்து வருவன எவையும் இரா; எல்லாம் நாடகங்களில் இயங்குந் தலைமகன் தலைமகள் பாங்கன் பாங்கி என்றற்றொடக்கத்தார் உரையாடும் உரையாட்டு களாகவேயிருக்கும். மற்றுக், கதை நூல்களிலோ தலைமகன் தலைமகள் முதலாயினார் நேர்முகமாகவோ, அன்றி ரோவொரு கால் தனிமையிலிருந்து தாமாகவோ பேசும் உரைகளைப் பிணைப்பதோடு, அக்கதைநூல்களை இயற்றும்

ஆசிரியன், தலைமகன் தலைமகள் முதலாயினார் தம்

இயற்கைகளைப் பற்றியும், அவர்தம் ஒழுகலாறுகளைப் பற்றியும், அவற்றால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றியும், அவர் இயங்கும் இடத்தின் இயல்பு காலத்தின் இயல்புகளைப் பற்றியும், இன்னும் இவைபோன்ற வேறு சிலபலவற்றைப் பற்றியுந்தான் கூறக் கருதியவைகளைக் பெறுவன். இவ்வேற்றுமையே யன்றிக், கதைகள் சிறியவும் பெரியவுமாய்ச் சுருங்கியும் விரிந்தும் நடைபெறல்போலாது, நாடகங்கள் மிகவிரிந்து செல்வதின்றிச் சுருங்கிநடக்கும் மற்றுமொரு வேறுபாடும் உடையதென்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

கூறவும் இடம்

என்றிதுகாறுங் காட்டிய கதைநூல் இலக்கணங்கள் இனிதொருங்கமையக் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கண் வருந் தலைமகள் கோகிலாம்பாள் தன் காதற்கணவற்கெழுதிய கடிதங்களின் வாயிலாகவே இந்நூற்கதை புலனாகிச் செல்லுதலால், அத்தலை மகளே இந்நூலை இயற்றிய ஆசிரியன் நிலையில் நிற்கின்றாள். ஆதலால், இந்நூலாசிரியன் தன் கருத்தாகக் கூறக் கருதியன வெல்லாம் அவன் வரையுங் கடிதங்கள் வாயிலாகவே புலப்படுக்க வேண்டியவனாவான் என்றுணர்ந்து கொள்க.

கோகிலாம்பாள் நாட்செல்லச் செல்லத் தமிழ்மொழிப் பயிற்சியில் மிக்கவளாய்ச் செல்லுதலின், துவக்கத்தில் அவள் எழுதுங் கடிதங்களில் அவள் இனத்தவரான பார்ப்பனர் வழங்கும் வடச்சொற்கள் இடையிடையே கலந்திருந்தல்போலப், பின்னர் அவள் எழுதுவனவற்றில் அவை அத்துணை கலவாமல், தனித்தமிழ்ச் சுவை மிகுந்து வருதல் கண்டுகொள்க. கோகிலத்தின் மாமனார் தமிழ்ப்பயிற்சியுடையரேனும், அவர் தமிழ்நடை

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/41&oldid=1581999" இலிருந்து மீள்விக்கப்பட்டது