உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் - 2 - 2❖ 28

vii

என்றும் அணையா விளக்கு!

தமிழ் அன்னையின் இயல்பான அழகுமுகத்தை மக்களுக்குக் காட்டினவர் மறைமலை அடிகள். தூசு படிந்து துகள் நிறைந்திருந்த அன்னை முகத்தை அலம்பிக் கழுவித் தூயதாக்கித் தமிழின உண்மை எழிலை உலகுக்குக் காட்டிய தமிழின் தலைத் தனித் தவப்புதல்வர் நமது அடிகளார். பிறமொழியின் துணையின்றித் தமிழ் தானே தனித்தியங்கித் தலைசிறக்கவல்லது என்பதை உலகுக்குக் காட்டிய பெரியார் நமது அகளார். சொற்பொழிவுத்திறனை ஒரு கலையாக வளர்த்துக் கற்போல் வார் நெஞ்சிலும் உணர்ச்சியைப் பாய்ச்சி அறிவுகொளுத்திய பெரியார் நமது அடிகளார். உலகிற்குகந்த உயர்நெறி தமிழ்நெறியாகிய சித்தாந்தச் செந்நெறியே என்பதை பறையறைவது போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி நூல்களாக வெளியிட்டும், பல்லிடம் சென்று திரளான மக்களுக்குப் பேசியும் தெளிவுபடுத்திய பெரியார் நமது அடிகளார். ஒவ்வொருவர் உள்ளத்திலும் தடையேதுமின்றித் தனியாட்சிபூண்டு அரசு வீற்றிருந்த செம்மலார் மறைமலை அடிகள் இன்று உலகினை நீத்தனர். அவர்களின் ஆ நிலைத்த அவ்வுடலும் காவி நனைத்த கல்லாடையும் இனி நாம் காண்பதரிது. ஆனால், அவர்களின் புகழ் உடம்பு உலகிற் பொன்றாது நிலை நிற்கும். தமிழ் உள்ளத்திலே அவர்கள் ஏற்றிவைத்த விளக்கு என்றும் அணையாது இருள்கடிந்து ஒளி பெருக்கும் என்பது திண்ணம்.

தமிழ்நாட்டு

மக்கள்

வி

பேராசிரியர் கோ. சுப்பிரமணிய பிள்ளை

(பக். 47)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/8&oldid=1581966" இலிருந்து மீள்விக்கப்பட்டது