உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழிக்கும், சிவநெறிக்கும் மறைமலை யடிகள்

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரும்பணி ஆற்றி யுள்ளார்கள். அடிகளின் தமிழ் உரைநடை நூல்கள் தமிழின் தனித்தூய்மை நிலைக்குச் சான்றாக மிளிர்கின்றன. எண்ணற்ற சொன்மாரிகள் பொழிந்து மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர். தமிழ் உள் ளளவும் மறைமலையடிகளின் மாண்புகழும் மங்காது ஒளிவீசி நிற்கும்.

- டாக்டா. எஸ். ஜி. மணவாள ராமாநுசம்

தமிழ் வளர்ச்சிக்கு அடிகளார் அமைத்த அடிப்படையினை நன்குணர்ந்து தமிழ் மொழிக்குப் பல துறைகளிலும் தொண்டு புரிவதே தமிழ்ப் பெருந்தகையார் மறைமலை யடிகளார்க்கு நாம் செய்தற்குரிய நன்றி நிரம்பிய வழிபாடாகும்.

- அறிஞர் வெள்ளை வாரணனார்

உழை

உயர் உதவு

தமிழ்மண்

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/330&oldid=1584091" இலிருந்து மீள்விக்கப்பட்டது