உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

  • மறைமலையம் -18

அழிக்க முனைந்தனர். அதற்கிடையில் அந்நகரத்தின் புற மதில்களையும், நெருப்புக்குத் தப்பின வீடுகள் கோயில் களையும் அழிக்கும் கொடு முயற்சியில் தலையிட்டனர். கவித்தலை மலைக்கோட்டையின் உயரத்திலிருந்து உரோமர் கள், கீழே தமது நகர்முழுதும் கரிந்து பாழாதலையும் கொடிய காலவர்கள் ஆங்காங்கு வெறிகொண்ட வேங்கைப் புலிகள் போல் அலைதலையும் கண்டு உள்ளம் வெதும்பினர். இப் பொல்லாத நேரத்திலும் அவர்கள் தாம் இறைவன்பால் வைத்த உறுதியான அன்பில் சிறிதும் நெகிழ்ந்திலர். இத்தனை தீங்கும் தூதுநெறி பிழைத்தார்க்கு உதவியாயிருந்தமையால் வந்த முறையான திருவருளொறுப்பே என நினைந்து, அதன் ஆணைக்கு அடங்கி ஒழுகவே தீர்மானித்தனர்.

தாம் உடன்கொண்டுவந்த உணவுப் பண்டங்களின் தொகை நாளுக்கு நாள் சுருங்கித் தாம் பட்டினி கிடக்க வேண்டிய நாள் அருகியும் தாம் சிவனையம்மைக்கு நேர்ந்து கொண்டு ஆங்குள்ள அவளது திருக்கோயிலில் விட்டு வைத்த தாராப் பறவைகளை உரோமர்கள் உரோமர்கள் சிறிதும் தொடவே யில்லை. இடுக்கட்பட்ட இவ்வேளையில் அவர்களில் ஒருவ னான 'பேவியன்றார்சன்' என்பான் செய்த செயற்கருஞ் செயல் பெரிதும் நினைவு கூரற்பால தொன்றாய் நிலவு கின்றது. தான் வழிபடும் குலதெய்வத்திற்கு ஆண்டிற்கு ஒருகால் எடுக்கும் திருவிழாநாள் வந்தது; அஃது அந்நகரத்திலுள்ள ஒரு சிறிய குன்றின்மேல் செய்யப்படுவதாதலால், அவன் வெள்ளை உடை பூண்டு கையில் வழிபடு பொருள்களும் அத்தெய்வத்தின் வடிவமும் ஏந்திக் கவித்தலை மலைக் கோட்டையிலிருந்து புறம்போந்து கீழ்இறங்கி அங்கே குழாங்கொண்டிருந்த கொடும்பகைவர் கூட்டத்தூடே அஞ்சாது வழிநடந்து சென்று, அச்சிறியகுன்றின்மேல் அவ்வழிபாட்டினைச் செய்து முடித்து, மீண்டும் செவ்வனே கவித்தலை மலைக்கோட்டை யினுள் போய்ச் சேர்ந்தான். அங்ஙனம் தெய்வவணக்கத்தின் பொருட்டு அவன் வருதலையும் போதலையும் கண்டு, அக்காலவர்கள் அவனுக்கு ஏதும் தீது செய்திலர் பாருங்கள்! தெய்வ வழிபாட்டில் உறைத்துத் தன்னுயிரையும் ஒரு பொருட்டாய் எண்ணாத அவ்வுரோமனைக் கண்டு, அத்தீயவர்களும் அடங்கி, அவனுக்கு ஏதுமே ஊறு செய்திலர் என்றால் தெய்வத்தின் அருளொளியிலேயே முழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/159&oldid=1584773" இலிருந்து மீள்விக்கப்பட்டது