உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

159

யேனும் பிறரை இழிவாகக் கருதுங்குணத்தையேனும் பெருமையாற் பேசாதிருக்கும் இயல்பையேனும் அவள்பால் வருவிக்கவில்லை யென்பதை அதனால் அவன் நன்குணர்ந்து காண்டான். அவள் வயிற்றிற் பெண் பிறந்ததுகண்டு தம் குடிமக்கள் மனத்தாங்கவில்லையென்று அவன் அங்ஙனம் அவளுக்குத் தெளிவாகவுந் திறப்பாகவுஞ் சொல்லிய சிறிது காலத்திலெல்லாம், அவன் தன் ஏவலாள் ஒருவனை அவள் பால் விடுத்தனன். அவ்வேவலன் மனக்கலக்கமுந் துன்பமுந் துயரமும் உள்ளவனாய் அம்மாதரசிபாற்போந்து, “பெரு மாட்டி, யான் என்னுயிரை இழவாதிருக்கவேண்டுமானால், எம்பெருமான் கடுமையாய் இட்ட ட்ட கட் கட்டளைப்படியான் தங்கள் இளம்புதல்வியை எடுத்துச் சென்று- எனப் புகன்று, அவ்வளவில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். அப் பெருமாட்டி அச்சொற்களைக் கேட்டதும், அவனது சுளித்த முகப்பார்வையினையுந், தன் கணவன் தனக்கு முன்னே சொன்னதையும் நோக்கிநினைந்து, அவன் தன் பெண் மகவினை எடுத்துச் சென்று கொலைபுரியும்படி தன்

வேலைக்காரனை ஏவினனெனவே எண்ணினாள். எண்ணித், தொட்டிலிற் கிடந்த மகவினை உடனே யெடுத்து முத்தமிட்டு அதற்கு இறைவன் அருள் உண்டாகுக வென்று வாழ்த்தித், தாய்க்கு இயல்பாக உள்ள அன்பினால் அவளது நெஞ்சந் துடித்ததாயினுந் தன் முகத்திலே ஏதொரு வேறுபாடுங் காட்டாதவளாய், அதனை அவ்வேவலன் கையில் மெல் லெனவைத்து, "இதோ, நண்பனே, இம்மகவினை எடுத்துச் செல்! நின்மன்னன் நினக்குக் கற்பித்தபடி இதனைச் செய்! ஆனாலும், மன்னன் விரும்பினாலன்றிக் கொடிய விலங்கு களும் பறவைகளும் இதனைத் தின்னும்படி காட்டுப் பாங்கான இடத்தில் இதனைக் கிடத்திவிடாதே!" எனப் புகன்றனள்.

பின்னர், அப்பிள்ளையொடு சென்ற அப்பணியாளன் தன் மன்னன்பாற் சென்று, அரசிமொழிந்ததை விளம்ப, அவன் அவளது ஒப்பற்ற மனத்திட்பத்தையறிந்து மிகவும் வியப்படைந் தான், அப்பால், அவ்வரசன் அம்மகவினைப் பொலோனா என்னும் ஊரில் தனக்கு உறவினளாயுள்ள ஒரு சிறந்த பெருமாட்டிபால் விடுத்து, அஃது இன்னார்க்கு உரிய பிள்ளையென்பதைத் தெரிவியாமல், அதனை உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/191&oldid=1584899" இலிருந்து மீள்விக்கப்பட்டது