உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

161

ப்போது தன் ஆண்மகவுக்கும் அதே தே ஏவலாளனை டுத்து, அதனைக் காலை செய்வித்தற்பொருட்டுப் போக்கினான்போல் வெளிக்குக்காட்டி, அதனைப் பொலோனா நகருக்கு விடுத்து அங்கே அது தன் அழகிய அக்காளுடன் வளருமாறு திட்டம்பண்ணினான். அப் பெருமாட்டியோ முன்னே தன் முதற்பிள்ளையைக் கொடுத்தபோது எங்ஙனம் ஏ தாரு மனக்குறையுங் காட்டாதிருந்தனளோ அங்ஙனமே இப்போதும் இருத்தல் கண்டு, அவள் கணவற்குண்டான வியப்பு இவ்வளவென அளவிடற்பாலதன்று; அவன், அவளைப்போன்ற மற் றொருத்தி இவ்வுலகில் எங்குமிருத்தல் இயலாதென்று எண்ணினான். தனது சூதான சூழ்ச்சியைச் செய்யாதிருந்தால், தன் மனையாள் தன் பிள்ளைகள்பால் எவ்வளவு அன்பு பூண்டு அவைகளைத் தன் இன்னுயிரெனக் கருதி எவ்வளவு கருத்தாயோம்பி வளர்த்திருப்பள் என்பதை அவன் அவளது நெஞ்சத்தியற்கையை உற்றுநோக்கி யாராயும் முகத்தாற் கண்டு கொண்டான். மற்று, அங்ஙனம் ஆராய்ந்து கண்டிலே னால், அவள் உலகியன் முறைக்கு அன்புடையவள் போல் நடப்பவளேயன்றி உள்ளபடியே யே தன் மக்கள் மாட்டு அன்புடையவள் அல்லளென்றும், எத்தனை பிள்ளைகள் தனக்குப் பிறந்தாலும் அத்தனை பிள்ளைகளையுந், தான் வேண்டியபடி, அவள் தன்னினின்றும் அங்ஙனம் எளிதாக அகற்றிவிடத் தக்கவளே யென்றும் அவன் ள

அவளைப் பிழையாக எண்ணியிருக்கக்கூடும்; ஆனால், அவளைத் தான் ஆராய்ந்து பார்த்த மட்டில், அவள் அன்பிற் கனிந்த தாயின் இயற்கை யுடையவளே யென்றும், எத்துணைக் கடுமையான இடிப்புகளையும் பொறுக்கவல்லவளே யென்றும் அவன் நன்குணர்ந்துகொண்டான்.

இனி, அம்மன்னன்றன் குடிமக்களோ, அவன் தன் பிள்ளைகளைக் கொன்று விடும்படி செய்தனனெனவே நம்பி, அவனை மிகவுங்கொடியனாக நினைந்து அவன்மேற் பெரும்பழிகூறினர்; ஆனால், அவன்றன் மனையாண்மேலோ பெரிதும் இரங்கினர். தன் பிள்ளைகள் இறந்துபோனதற்காகத் தன்னைக் கண்டு புலம்பவந்த பெண்மணிகட்கெல்லாம், அப்பெருமாட்டி, தன்பிள்ளைகளைப் பெற்ற தந்தைக்குத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/193&oldid=1584916" இலிருந்து மீள்விக்கப்பட்டது