உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் -18

‘ஒக்ஷித்கான்' ஊர்க்கே போயினர். அங்கே சென்றபின் அச்சிறுவரிருவரும், அவ்வூரிலுள்ள வழிகளையும், வீடு களையும், அவ்வீட்டிலுள்ளாரையும், அவ்விருவருந் தமது முற்பிறவியில் வழக்கமாய் அணிந்திருந்த ஆடைகளையும் தெரிந்துகொண்டனர். அதைப் பற்றிச் சிறிதும் ஐயமே யில்லை. அவ்விளைஞர் இருவரில் இளவலாயிருந்தவன், தான் முற்பிறவியிற் பெண்மகளாயிருந்ததுந், தான் தன் கணவனுக்குத் தெரியாமல் ‘மாதெட்’ என்னும் ஒரு மாதினிடம் ஒருகால் இரண்டுரூபா கடன் வாங்கியிருந்ததும், அக்கடனைச் சலுத்தாமலே தான் அப்போது இறந்து போயதும் எல்லாம் நன்கு நினைவு கூர்ந்துரைத்தான். ‘மாதெட்!' என்னும் அம்மாதர் இன்னும் உயிரோடிருந்தமையாற், பெற்றோர்கள் க்கடனைப்பற்றி அவளை வினாவினர்; அவளும் அதனை நினைவு கூர்ந்து நீண்ட நாளுக்கு முன் தான் அங்ஙனங் கடன் கொடுத்தது உண்மையே யென ஒப்புக்கொண்டாள்.

L

"சிறிது காலத்திற்குப் பின்னர் யான் இச்சிறுவர் ருவரையும் பார்த்தேன். இப்போது இவர்கட்கு அகவை ஆறாண்டுக்குமேற் சிறிதுகூட இருக்கும். மூத்தபையன் குள்ளமாய்த் தடித்துக் கொழுமையாய் இருந்தனன்; இளைய பையனோஇன்னுங் குள்ளமாய்ச் சிறிது இடுகிய கண்ணின னாய் ஒரு பெண்பிள்ளையைப்போல் இருந்தனன். அவரிருவருந் தங்கள் பழம் பிறவிகளின் நிகழ்ச்சிகளை எனக்கு மிகுதியாய் எடுத்துரைத்தனர். தாம் முன்னே இறந்தபிறகு தமக்கோர் உடம்பேயில்லாமற் சிறிதுகாலம் இடை டைவெளியில் அலைந்து

காண்டிருந்ததாகவும் மரங்களில் ஒளிந்துகொண்டிருந்த தாகவும் எனக்குச் சொன்னார்கள். இவ்வாறு அலையலானது அவர் தாஞ்செய்த தீவினைப்பயனாகும். பின்னர்ச் சிலதிங்கள் கடந்து, மறுபடியும் அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்தார்கள். 'முன்னே என் நினைவு மிகத் தெளிவாகயிருந் தமையால் யான் ஒவ்வொன்றையும் நினைவுகூரக் கூடியவனா யிருந்தேன்; முன்போல இபோது யான் அவைகளை நினைவு கூரக் கூடவில்லை' என்று அம் மூத்தபையன் என்னிடம்

மொழிந்தனன்.'

66

இன்னும், என்னு ன் அலுவல் பார்க்கும் ஒரு துரைமகனார்க்கு ஒரு பர்மிய பாடிகாவலன் ஏவலனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/220&oldid=1585143" இலிருந்து மீள்விக்கப்பட்டது