உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் -18

இந்நூலைப் பற்றிய குறிப்புரை..

எளிய நடையிலும், பள்ளிச் சிறார் பயன்மிகப் பெறும் வகையிலும், தமிழறிவு தழைக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது. சிறுவர்க்கான கடமைகளைக் கூறும் அடிகளார், சிறு கதைகள் பலவற்றின் வழியாகச் சிந்தனைகளை வளர்த் துள்ளார். அடிகளார் சொல்வளனும் கற்பனை வளனும் இந்நூற் செய்திகளுக்குத்துணை நிற்கின்றன.

ஆய்வு நெறிகளையும் ஆய்வுப் பயன்களையும் ஆய்வாளர் இயல்புகளையும் அடிகளார் விளக்கி யுள்ளார். உலக நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி ஆராயும் ஆய்வே, உண்மைப் பயன்மிகு ஆய்வாகும்.

செந்தமிழ்வழி சிறுவர்க்கான சிறந்த கருத்து களை அடிகளார் அன்பு வடிவிலும் கூறியுள்ளார். நல்லெண்ணமும் நன் முயற்சியும் கொண்டால் செல்வத்தையும் சிவத்தின் அருளையும் கொள் ளலாம் எனக் கூறும் இந்நூலுக்கு ஆர்வந்தூண்டும் அறிவார்ந்த ஆங்கில முன்னுரை மேலும் அழகு சேர்க்கிறது.

– நா. செயப்பிரகாசு

மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/35&oldid=1584649" இலிருந்து மீள்விக்கப்பட்டது