உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கட்டுரை - 3 *

vii

மறைந்த அடிகளார்! தமிழ் ஞாயிறு

ஆங்கிலம், ஆரியம், தீந்தமிழ் - என்ற மூன்றையும் துறைபோக முற்றக்கற்ற ஒரு மூதறிஞர் எந்தம் அடிகள். மும்மொழிகளையும் ஒருசேர இவ்வாறு தமிழுலகில் மாசறக் கற்ற நல்லாசிரியர் இவர்க்கு முன்னுமில்லை; இவர்க்குப் பின்னு மில்லை. இது தமிழ் வரலாறு.

வடமொழியும் தமிழும் வேறு வேறு என்பதை விளக்கிக் காட்டினார். ஆசிரியர் சிவஞானமுனிவர். (18ஆம் நூற்.) வட மொழியை அறவே அகற்றிவிட்டுத் தமிழ்தனித்து இயங்கவல்லது என்பதை ஆராய்ந்து சொன்னார் டாக்டர் கால்டுவெல் (19ஆம் நூற்.) அவ்வாறு பல்லாயிரம் ஏடுகள் தமிழில் எழுதிக் காட்டினார் ஆசிரியர் மறைமலையடிகள். (20ஆம் நூற்.) மொழி வரலாற்றில் இந்த மூன்றும் மூன்று மாணிக்க உண்மைகள்.

L

அடிகளார் ஏற்றிய விளக்கு இன்னும் எரிகின்றது சான்றோரே! "எம்மை மறந்தாலும் யாம் மறக்க மாட்டேமால்”, நீவீர் அடிவைத்து நடந்த அவ்வழியை எமது நெஞ்சு நாடுகிறது. அடிகள் மறைந்த அத்திசை நோக்கி எந்தலை தாழ்வதாக!

வித்துவான் அ. கிருஷ்ணமூர்த்தி

(பக். 48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/8&oldid=1584622" இலிருந்து மீள்விக்கப்பட்டது