உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 19

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

தமிழக வரலாறு, தமிழ்ப் புலவோர் வரலாறு, மொழி, சமயம் ஆகிய பல்துறை பற்றிய அடிகளாரின் பதின்மூன்று கட்டுரைகள் இந்நூலில் பெற்றுள்ளன.

அடிகளார் அமைத்த பொதுநிலைக்

டம்

L

கழகம்

முப்பெரு நோக்கங்களைக் கொண்டதாகும். முழுமுதற் கடவுள் நம்பிக்கை, பிறவித் தூய்மை நீடிய தூய நல்வாழ்வு, தவமுயற்சிகள், நல்லொழுங்கு ஆகியன முதல் நிலையில் அமைகின்றன கொலை புலை சாதி சமய வேற்றுமை நீங்கிய அன்பொழுக்கத்தை எங்கும் எப்போதும் பரப்புதல் இரண்டாம் நிலையினதாகும். தனித்தமிழ் மொழிப்பயிற்சி நூற்பயிற்சி ஆ பயிலுதலும் பரப்புதலும் அமைகின்றன.

கியன

மூன்றாம் நிலையில்

நக்கீரனார் னார் வரலாறும், அவரது நூல் வரலாறும் திறனும் அடிகளாரால் ஆராயப்பெற்றுள்ளன.

தமிழர்கள், சைவர்கள் ஒற்றுமையின்மையும், வீண்பொழுது போக்கும் காலக் கழிவும், பொய்மைப் போற்றுதல்களும் போக்குகளும் ஒழித்துச் சிவபிரானை உண்மையன்பான் வழிபட்டு அறிவு நூலாராய்ச்சி செய்து, இயலாதாயின் அத்தகு ஆராய்ச்சி முதிர்ந்த நல்லோர்தம் நல்லோருரை கேட்டாவது பிழைக்கும் நெறிதேட அறிவுறுத்தியுள்ளார் அடிகளார்..

– நா. செயப்பிரகாசு

மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் (பக். 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/137&oldid=1585729" இலிருந்து மீள்விக்கப்பட்டது