உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

253

மெய்ந்நூலாசிரியரான பெர்க்சன் (நெசபளடி)ே என்பவர் கண்ணின் வியப்பான அமைப்பை ஆராய்ந்துகாட்டிக் கடவுளின் அறிவாற்றலையும் அருளையும் நிலை நாட்டினார்.

ஆகவே. கடவுள்வகுத்த இவ்வியற்கையமைப்பின் திறங்களை ஆராயுந்தோறும் நாம் அவன்றன் ஆற்றலையும் அருளையும் அறிந்தறிந்து மெய்யறிவு விளங்கப்பெறு கின்றோம் அல்லமோ? பேரறிவுடையோன் ஒருவன் வகுத்த ஒரு நீராவிவண்டியின் அமைப்பையேனும், அல்லது அதுபோன்ற மற்றொரு வியத்தகு பொறியையேனும் நாம் ஆராய்ந்து நோக்குந்தோறும், அவனது அறிவின்திறம் நமக்குப் பெரியதோர் இன்பத்தை விளைத்து நமதறிவையும் விரிவுசெய்து விளக்குதல்போல, இறைவன் படைத்த படைப்பின்வழியே அவனது அறிவின் ஏற்றத்தைக் கண்டு நாம் வியந்து மகிழுந்தோறும் நமதறிவும் முறை முறையே விரித்து பேரொளியோடும் விளங்கா நிற்கும். இவ்வாறு இறைவன்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை அறியு முகத்தானன்றி, நமக்கு உயர்ந்த அறிவு விளக்கம் உண் டாதற்கு வேறு வழி இல்லையாதலால், நமக்குக் கடவு ளுணர்ச்சி வேண்டாமெனப்பகர்ந்துவரும் ஒருசிலரது வழுக்குரை ஏழைமக்களை அறியாமைப் பாழ்ங்குழியில் ஆழ்த்தி அழிப்பனாவாமென்றுணர்மின்கள்! இவ்வாற்றாற் சைவசமயமானது, மக்களுக்கு உரிய அறியாமையும், பிறப்பு இறப்பும் இல்லாப் பெருமுதற் கடவுளான சிவபெருமான்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை விளக்கும் வழியே மக்க ளெல்லாரையும் பேரறிவுநிலைக்குச் செலுத்துவதோர் ஒப்பற்ற கொள்கையாதலை உணர்ந்து கொண்மின்கள்!

ச்

இனிக்‘கடவுள் ஒருவர் இருந்தால், அவர், தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனக் கருதார்' என்னுங்கருத்துப் பட ஒருசிலர் உரைக்கும் உரையும் பாழுரையாதல் காட்டுதும்: எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் படைத்து, அவற்றின் நடுவே இவ் வியப்பான இவ்வுடம்புகளிற் புகுத்தி நம்மை வாழச் சய்திருக்கும் வகையினை உற்றுநோக்கும் நுண்ணறி வாளர், இங்ஙனம் அவன் செய்திருப்பது ஒரு சிறந்த நோக்கம்பற்றியே யல்லாமல் வெறும் பாழுக்காக அன்றென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/286&oldid=1585898" இலிருந்து மீள்விக்கப்பட்டது