உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கட்டுரை - 4 *

vii

மறைமலையடிகள் நூற்றாண்டுவிழா!

புலன் மழுங்கிக் கிடந்த தமிழர் உள்ளத்துத் தனித்தமிழ் ஒளியேற்றிய அடிகளாரின் பெருமை சொல்லில் அடங்காது. அவர்களின் வாழ்வியல் தொண்டு முக்கூறுகளைக் கொண்டது. மொழித் திருத்தம், சமயத் திருத்தம், இனத் திருத்தம் ஆகியவை அவை. மொழி நிலையில் நெடுங்காலமாக ஆரியத்தால் கட்டழிந்த செந்தமிழைத் தம் வளமை மிகும் புலமைத் திறனால் கட்டறுத்து, மீண்டும் செழுந் தமிழாக உலா வரும் நோக்கத்தையும், வரலாற்றையும் தொடக்கி வைத்த பெருமை அடிகளாரையே சாரும். அடுத்து, போலி மூட நம்பிக்கைகளாலும், சாதிச் சழக்குகளாலும் சீர்கெட்டு வந்த சைவ சமயத்தைத் தம் அகப்புற ஆய்வால் புலந்திருத்திய செவ்வி அடிகளாருடையது. மற்று, ஆரியப் பார்ப்பனரால் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், திசை மாற்றப்பட்டும் நிலை தடுமாறிய தமிழினத்திற்கு, மெய் வரலாற்றுக் கூறுகளைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் நன்கு எடுத்துக் காட்டி, பழந்தமிழ் வரலாற்றில்

ஒளியேற்றிய அவர் உரனுங் கொள்கையும் ஒருங்கு நினைக்கற்பாலன.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்ச்சிட்டு குரல் - 8, தி.பி. 2007 - துலை - நளி (நவ. 1975) இசை -12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/8&oldid=1585594" இலிருந்து மீள்விக்கப்பட்டது