உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் - 20

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

99

“எமக்கு உண்டான கொடிய நோய் தீர்த்த முருகப்பிரான் திருவருளை வியந்து இயற்றிய எமது மும்மணிக்கோவை' என இரண்டாம் பதிப்பில் அடிகளார் எழுதிய எழுத்தால், இந்நூல் இயற்றப் பெற்ற நோக்கம் விளக்கமாகும். அடிகளின் பழந்தமிழ்ப் புலமையும் சமயத்திறமும் விளங்க அமைந்த அவற்றின் பிழிசாறாகத் திகழ்கின்றது. அந்நாள் பெரும்புலவர்களான அரசஞ் சண்முகனார், மு. இராகவ ஐயங்கார் முதலியவர்கள் பாராட்டுப் பெற்றது இந்நூல்.

நூல்.

“சோம சுந்தரத் தோமறு குருவன்”

66

“நாராயணன் எனும் குருவனும்”

என்பன போன்றவற்றால் தம் ஆசிரியர்கள் மேல் அடிகள் கொண்ட பற்றுதல் வளிப்படும். அடிகளின் மாணவர் இளவழகனார் இந்நூலுக்கு அரிய விரிவுரை வரைந்துள்ளார். இந்நூல் பாடி முடிக்கப்பட்டது 1900 செப்டம்பர் 29.

இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/27&oldid=1586740" இலிருந்து மீள்விக்கப்பட்டது