உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பெருந் தலைவராக

மறைமலையடிகள் விளங்குகிறார். அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அகன்ற ஆங்கில அறிவும் பரந்த சமற்கிருத மொழிப் புலமையும், தமிழின் மறுமலர்ச்சிக்கும் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாய் அமைந்தன. ‘தமிழன்' எனும் அவருடைய எண்ணத்தின் எழுச்சியும் ‘சைவன்' எனும் உணர்வினால் அவர் உள்ளத்தில் உண்டான மலர்ச்சியும் தமிழ் ஆராய்ச்சியுலகில் புதிய தொரு திருப்பத்தை உண்டாக்கின. இதனால், பண்டைத் தமிழரின் பழம் பெருமையையும், தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைச் சிறப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அடிகளாரின் ஆராய்ச்சிப்பணி அமைந்ததைக் காணுகின்றோம்.

-

திருக்குறள்மணி க.த. திருநாவுக்கரசு

தனியொருமானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புகளை யெல்லாம் துகளாக்கி வெற்றி கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ்வெற்றியை ஈட்ட முடியுமெனில் தமிழ் இனம் ஒருங்கிணைந்து தன்னிலை உணர்ந்து தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதி பூணின் எவரும் அதனைத் தடுக்க முடியாது.

- ஈழ வேந்தன்

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/362&oldid=1587106" இலிருந்து மீள்விக்கப்பட்டது