உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

❖ 21❖ மறைமலையம் – 21

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

மக்களை நல்வழிப்படுத்தும் மேலோர் கடன், தமிழ் இலக்கண இலக்கிய - பிற நூல்களின் உண்மை நிலை, உண்மைச் சைவ சமய நெறிகளும் பயன்களும், கடவுளைப் பற்றிய பகுத்தறிவு நிலை, வினாவிடைகள் ஆகியன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மெய்யறிவு பறுதலும், அறியாமை நீக்கமும், அறிவுப்பேறும், பிறவி நோக்கங்களாக அறிவிக்கும் அடிகளார், அன்பு, ஒழுங்கு தூய்மை இறைவழிகாட்டும் இறையருள் இன்பம் ஆகியன போற்றும் இயல்பினர். உலகத்தில் உயிராகவும் உடலாகவும் உடனிருந்து உலக வாழ்வின் உயர்வுக்கு உதவுகிறவன் இறைவன் என்னு சித்தாந்த முடிவுபற்றிக் கூறும் அடிகளார் சமய வழிபாட்டு உண்மை நிலைகளையும் விளக்கியுள்ளார்.

சைவ

முருக வழிபாட்டின் தத்துவம், பகலவன் வழி பாடே திருமால் வழிபாடு என்ற உண்மை ஆகியன விளக்கி, இறைவனின் அருளுருவ இயல்புகளைப் புரிந்து காள்ளாது, புரட்டுரைகளாக அமைந்த புராணப் பொய்க்கதைகள் புறக்கணிக்கத் தக்கன எனத் துணிந் துரைக்கும் அடிகளார், இறைவனை அறிவு நிலையில் அறிந்துணர்ந்து அடுத்தவர்க்கும் அறிவுறுத்தும் ம் ஆற்றலினர் என்பது வெளிப்படை.

நா. செயப்பிரகாசு

மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் (பக். 16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/227&oldid=1587334" இலிருந்து மீள்விக்கப்பட்டது