உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

❖ - 21❖ மறைமலையம் – 21

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

கையறுநிலை, தாபத நிலை, மன்னைக்காஞ்சி, என்னும் முக்கூறுகளாக இந்நூல் விளங்குகிறது. நாயகருக்கும் (அடிகளாரின் ஆசிரியர் சோமசுந்தர நாயகர்) அடிகளாருக்கு மிடையே இருந்த விழுமிய உறவு விளைத்த உணர்வாக இந்நூற் பாடல்கள் விளங்கு கின்றன. கையறு நிலைப்பாடல்களில் குறிப்பிடத்தக்க தாக விளங்கும் சோமசுந்தரக் காஞ்சியாக்கத்தின் முன்னுரைவழி ரைவழி அந்நாளைய சமய வேறுபாட்டு நிலைகளும் சமயச் சொற்போர் முறைகளும் புலப்படு கின்றன.

சோமசுந்தரக் காஞ்சியாக்கத்தின் பாடல்கள் சங்கப் பாடல்களின் அழகும் செறிவும் இனிமையும் கொண்டவை. நாயகர் 'விளங்கியதும்' 'வீழ்ந்ததும்', அவர் இல்லாததால் இயலாததும்' உணர்ந்து பாடி யுள்ளார் அடிகளார். "சோமசுந்தரக் காஞ்சியாக்கம்” அவலச் சுவையுடன்முரணாகாத வகையில், அதன் உள்ளுறு சுவைகளாக, மகிழ்ச்சி, வியப்பு, இறும்பூது, துன்பம், ஆறுதல் எனப் பலவகை உளப்பாடு, மெய்ப் பாடுகளையும் படிப்படியாக ஏற்றிக்கொண்டு சென்று அழுகையையும் ஓர் அறிவார்ந்த பண்பார முகை யாக்கிக் காட்டுகிறது”. அடிகளார் உணர்வுக் கோவை யில் ஒன்றிக் கலந்து பாடுதல் இந்நூல்வழி நன்குணரப் பெறும்.

- நா. செயப்பிரகாசு

மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் (பக். 3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/35&oldid=1587142" இலிருந்து மீள்விக்கப்பட்டது