உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 2

மறைமலையடிகளின் உலகியல் திறன்

அடிகளுடைய சிவத்தொண்டு, தமிழ்த் தொண்டு என்றால், அவை அவ்வளவு எளிமையானவை அல்ல. உயர்ந்த இலக்கண, இலக்கிய தருக்க மெய்மைகளோடு இளமையிலேயே புலமை சிறந்து, தமிழகமும் உலகமும் பாராட்டும் முறையில், நூல்கள் பல எழுதிப் பெருந் தொண்டு நடந்திருக்கிறது. அடிகள் மிக இளமையிலேயே புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும் பெற்றுவிட்டதனால் அடிகளார் இளையவர் என்று எண்ணி, எதற்கெடுத்தாலும் மறுப்புக்கள் பாணங்கள் போல அடிகளைச் சூழ்ந்து கொள்ளும். சென்ற இடங்களிலெல்லாம் கேள்விகளுக்குமேல் கேள்வியாக அம்புப்பொதிகள் அவிழும். அத்தனை கேள்விக் கணைகளுக்கும் அடிகளார் தம் நுண்ணுணர்வினாலும் திருவருள் வலத்தாலும் தக்க விடைகள் பகர்ந்து எல்லாவற்றையும் முறியடித்து வீறி விளங்கி வென்று, உலகெங்கும் நலம் புரிந்திருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் வாதம் புரிவதற்கென்றே ஒருவரை ஒருவர் கூட்டத்துக்கு அழைத்துக் களிப்பெய்துவார்கள். அடிகள் எதற்கும் அஞ்சுவதில்லை; 'உடையார் ஒருவர் தமர் நாம்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை' என்று அருள் உரங்கொண்டு தோள் தொட்டு ஆர்ப்பரித்துக் களம் புகுவர். ஞான இளஞ்சூரியனாய்த் தோன்றி அங்கங்கும் முதிர்ந்தெழுந்த அறியாமை இருட் படலங்களைக் கிழித்தொதுக்கியும், சிங்க ஏறுபோல் களத்தில் ஒரு தனிப் பேருருவாய் உலவியும், வீறு மிக்கவர்களாய் விளங்கினார்கள். அடிகள் காலத்தில், வாதத்துக் கழைத்தவரே அடிகளாரைக் கண்ட மாத்திரத்தில் வெருண்டு நிலைகலங்குவர்.

சிவத்திரு அழகரடிகள் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 1 - 10)

vii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/8&oldid=1587115" இலிருந்து மீள்விக்கப்பட்டது