உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1 18

231

தாமாக எழுதுவன இலக்கணப் பிழைகள் நிறைந்தன வாயிருத்தலே சான்றாம். அதுகிடக்க. ஒரு சினைப்பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும், ஒரு நிறத்தின் பெயர் அந் நிறத்தினையுடைய பொருட்கு ஆகிவருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம். என்னை? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ஒற்றைவிட்டொன்று பிரியாத தற்கிழமைப் பொருள்களா யிருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஒருறுப்பின் பெயர் அதனையுடைய முழுப் பூண்டிற்கும் பெயர் ஆகிவரும்; நீலம் என்னும் நிறத்தின் பெயர் அதனையுடைய நீலப் பூவுக்கும் பெயர் ஆகிவரும். இங்ஙனமே, ஏழிசையுள் ஒன்றாகிய 'தாரம்' என்பதன் பெயரும் அதனை ஓர் உறுப்பாகவுடைய சாதாரிப்பண்' ணாகிய முதலையு முணர்த்துதல் நெருங்கிய தொடர்புடைய ஆகுபெயர்ப் பொருளாகும்.

6

னிக், கங்கையின்கண் வேடச்சேரி, கட்டில் கூப்பிட்டது என்றாற்போல்வனவற்றுட் ‘கங்கை' என்பது கங்கைக் கரையினையும், 'கட்டில்' என்பது கட்டிலுள்ளாரையும் உணர்த்துதற்கண். இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பாருட்கும் அத்துணை நெருக்கமின்மையின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின. அகன்ற பொருட்கண் வரும் ஆகுபெயரும். ஆக்கியோன் கருத்தை ஒட்டிப் பாருளுரைக்குங் கால் ஒரோவழி இன்றியமையாது வேண்டப்படுவதே யாகும். இவ்வாறு ஆக்கியோன் கருத்துக்கு மாறாகாமற் பொருளுரைக்கும் வழிவரும் ஆகுபெயர்ப் பொருளையுங்கூட இடர்ப்படு பொருளென்று கூறி விடுபவர் தொல்லாசிரியர் நூலுரைகளிற் பயின்றறியாதவரே

யாவரென்பதனை நிலைநிறுத்தும்.

இனித் தாரம் என்பதற்குச் சாதாரிப் பண்ணெனப் பொருள் கூறுதல் இடர்ப்படுபொருளே யாமென்று கொள்வார்க்குச் சாதாரியென்று சிறப்புப் பொருள் கூறாது, தாரமாகிய இசையென்றே பொருள் கொண்டு இறைவன் பாணபத்திரர் பொருட்டு அருளோடு இசையைப் பாடிச் சல்லுத்தினன்' என்று நேர்பொருளே கூறினும். அதுவும் இறைவன் இசைபாடின்மையையே அறிவிக்கின்றதன்றோ? 'தாரம்' ஏழிசையுள் ஒன்றாகலின் அதற்குச் சாதாரி என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/264&oldid=1587711" இலிருந்து மீள்விக்கப்பட்டது