உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

  • மறைமலையம் - 22

இந்நூலைப் பற்றிய குறிப்புரை..

மாணிக்கவாசகர் தேவார மூவர்க்கு முன்னவர் என்றும், பின்னவர் என்றும் இருவேபறு ஆய்வாளர்கள் உளர். மாணிக்க வாசகர் சொல்நடை, சங்க நடைசார்ந்ததாதலின் மூவர்க்கு முன்னவர் என்றும், சுந்தரர் பாடிய திருத் தொண்டத் தொகையில் மாணிக்கவாசகர் பெயர் குறிப்பிடப்படாமையால் அவர்க்குப் பின்னவர் என்றும் இருசாராரும் கூறுவர். இச்சிக்கலை அகற்றும் உறுதியால், அடிகளார் ஆழ மாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே என்று முடிவுகட்டினார்.

மாணிக்கவாசகர் வரலாறு புராண நூல்களில் வெவ்வேறாகக் காணப்படுவதால் அவற்றை உண்மையெனக் கொள்ளாமல் திருவாசகம் திருக்கோவை நூல்களில் காணப்படும் குறிப்பு களையே வரலாற்றுச் சான்றாகக் கொள்ள வேண்டும் என்னும் தேர்ந்த முடிவில் ஆய்ந்து வரைந்த பெருநூல் இஃதாகும்.

இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/35&oldid=1587481" இலிருந்து மீள்விக்கப்பட்டது