உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

25

வல்லென்ற நெஞ்சினையும் எத்துணையெளிதிற் கரைக்குந் தகையதாய் மிளிர்கின்றது!

தம்மாற் காணப்படாத ஒருவரின் குணநலங்களைக் கேட்டு அவர்பால் அன்புமீதூரப் பெற்ற மற்றொருவர் அவர் மாட்டு எத்துணைதான் அன்பு பூண்டு ஒழுகுவாராயினும், அவர்க்குள்ள அவ்வுள்ள நெகிழ்ச்சி அந் நண்பரை அவர் நேரே காணப்பெறுங்கால் அடையும் பேரின்பப் பெருக்கிற்கு ஒரு சிறிதும் ஒவ்வாது; அவரைக் காணாமுன் வைத்த அன்பு அவரைக் கண்டபின் கரைகடந்து பருக, அதனை ஆற்றாராய் அம்மற்றவர் கண்ணீர் உகுந்துக் கதறியழுது ஆடிப்பாடித் தன்னை மறந்த தன்மையினராய்க் குழைந்து நீராயுருகும் நிலையினை நேரிற் கண்டுணர்ந்தவர்க்கே யாங் கூறும் இவ் வுண்மை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமே, முழுமுதற் கடவுளின் அருட்பெருந் தன்மைகளை நேரே காணப்பெறாமல் உய்த்துணர்ந்தறிந்து அவ்வாற்றால் அவர்பால் அன்பு நிகழப் பெற்றார்க்குள்ள அன்பின் நிலை, அக்கடவுளைத் தம் கண்ணெதிரே கண்டு அவர் மாட்டுக் கரையிகந்து பெருகும் அன்புடையராயினார்க்கு மீதூரும் பேரின்ப நிலைக்கு ஒரு தினைத்தனையும் ஈடாகாது. மாணிக்கவாசகர் தாங் கண்ட இறைவன் திருவுருவினையும், அவ் வுருவின் நிறத்தினையும், அவ் வுருவின் அடையாளங்களையும் தாம் அருளிச் செய்த திருவாசகத்திற் பலகாலும் பலவிடத்தும் அடுத்தடுத்து ஓதுகின்றார்; அவற்றுட் சில இங்கே காட்டுதும்:- 'எந்தாய் உன்றன்

66

“வண்ணந்தான் அதுகாட் வடிவுகாட்டி

மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய்

எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே.’

“அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ வென் எம்பிரான்”

என்று திருச்சதகத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/58&oldid=1587504" இலிருந்து மீள்விக்கப்பட்டது