உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 3

vii

மறைமலையடிகளின் மும்மொழிப்புலமை

இவ்விருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்பு மின்றித் திகழ்ந்த மாபெரும் புலவர் மறைமலையடிகள் என்பது, எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வுண்மையாகும்.

உலக மொழிகள் (ஏறத்தா) மூவாயிரத்துள், ஒரு போதும் வழங்கா இலக்கியப் பெருமொழி யென்னும் வகையிற் சமற்கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர் தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும், தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரேனும், அவரனைவருள்ளும், எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோ லகன்றும், அமைதி வாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும், பிறங்கித் தோன்றிய பெரும் புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே யென்பது, மிகையாகாது.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 11 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/8&oldid=1587454" இலிருந்து மீள்விக்கப்பட்டது