உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஏனையோரெல்லாம்

மறைமலையம் - 23

செய்யுட்கள் வகுத்துரைத்தலின், அஞ்ஞான்றை ஆரியப் பார்ப்பனரே தம் மனைவியரும் மகளிரும் பிறரை மருவுதற்கு இடந்தந்தன ரென்பது பெறப்படும். ஆரிய மாந்தர், தம் இனத்தவரின் தொகை குறையாமல் மேன்மேற் பெருகுதலையே பெரிதுங் கருதிவந்தன ரல்லாமல், தம்மனோர் ஒழுக்கத்திற் சிறந்து விளங்கல் வேண்டுமென்பதை முதன்மையாய்க் கொண்டிலர். தாமும் தம் இனத்தவரும் மட்டுமே செல்வத்தினும் ஏனை நலங்களினும் மிக்குயர்ந்து வாழல்வேண்டும், மிடிப்பட்டு இறந் தொழிதல் வேண்டுமென்பதே அவர்கள் இந்திரன் மித்திரன் வருணன் முதலிய தேவர்களை வேண்டிப் பாடிய பாட்டுக்களில் யாண்டுங் காணக்கிடக்கின்றது; இதற்குச் சான்றாக இருக்குவேத முதன் மண்டிலத்திலேயே யுள்ள இருபத் தொன்பதாம் பதிகத்தைப் பார்த்துக்கொள்க. உலகின்கண் உள்ள மக்கள் எல்லாரும் எல்லா நலங்களினும் உயர்ந்து தழைத்தல் வேண்டுமென்னும் அருளிரக்கமாதல், இம்மை மறுமை யிரண்டினும் தூய வுள்ளத்தினராய் இறைவன் திருவடிப் பேரின்பத்தைப் பெறல்வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கமாதல் ஆரியர்க்குச் சிறிதும் இருந்தில. தாம் வணங்கிய தேவர்க்குத் தாம் ஒன்றுகொடுத்தால் அத்தேவரும் தமக்கொன்று கொடுத்தல் வேண்டும் என அவரோடு வாணிகம் புரிவதே அவ் வாரியரது வழிபாட்டு முறையாகும். இதற்கு ஏற்பவே, தைத்திரிய சம்ஹிதையில் (1, 8, 4, 1)

66

ஓ பங்கிட்டு உண்டோய், நின்வயிறு நிரம்பியபின் உதோ பறந்துசெல்! நன்றாய் வயிறு நிறைந்தபின் திரும்பவும் எம்பாற் பறந்துவா! ஓ இந்திரனே, விலைதீர்த்துக் கொண்ட வாணிகத்திற் போல ஆற்றலையும் வலிமையையும் நாம் மாற்றிக் கொள்வோம்! எனக்கு ஒன்றுகொடுயானும் உனக்கு ஒன்று தருவேன்; எனக்கு ஒன்று கொண்டுவா. யானும் உனக்கு ஒன்று கொண்டு வருவேன்.” என்று கூறுதலும், இதனோடு ஒப்பவே பகவற்கீதை. (3, 11-16)யும்.

66

வேள்வியாற்றுதலால் தேவர்களைச் செழிக்கச்செய், அதனாற் றேவர்களும் நின்னைச் செழிக்கச் செய்வர்” என்று கூறுதலும் எமது கூற்றை வலியுறுத்துவனவாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/109&oldid=1588432" இலிருந்து மீள்விக்கப்பட்டது