உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

  • மறைமலையம் - 23

நூற்றாண்டிலிருந்த பெருந்தேவனார் மற்றொருவரும் பழைய நாளிலேயே மாபாரதக் கதையைத் தமிழில்

மொழி பெயர்த்துப் பாடினர். இராமாயணமோ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற் கம்பர் மொழிபெயர்த்துப் பாடும் வரையில், தமிழ்ப் புலவர் எவராலும் பாராட்டி மொழி பெயர்க்கப் படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

அல்லதூஉம், பாரதக்கதை நிகழ்ச்சியில் தொடர்புற்று நிற்குங் கண்ணபிரான் திருமாலின் வடிவமாகக் கருதித் தமிழ்நாட்டிற் பழைமைதொட்டு வழங்கப்பட்டு வந்தாற்போல, இராமன் வணங்கப்படாமையை உற்று ஆராயுங்காலும் கண்ணனைப்போல் இராமன் உண்மையாயிருந்தவனல்லன் என்பது விளங்கா நிற்கும். 'புறநானூறு,' ‘அகநானூறு' முதலான தொகை நூல்களிற் காணப்படும் பழைய பாட்டுகளில் மட்டுமேயன்றித், திருமாலுக்கென்றே பாடப்பட்ட பண்டைத் தமிழ்ப் பாக்களும் அடங்கிய 'பரிபாடலி'லுங் கண்ணபிரான் வணக்கமேயல்லாமல், இராமனைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படவில்லை. ஆதலால், இராம இராவணப் போர் தென்னாட்டின்கண் உண்மையாக நடந்ததன் றென்பதூஉம். பரிபாடற் பாட்டுகள் இயற்றப்பட் காலத்தில் இராமாயண கதை தென்னாட்டிற்கு வரவில்லையென்பதூஉம் நன்கு பெறப்படும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற் 'சிலப்பதிகாரம்,' 'மணிமேகலை' என்னுந் தனித்தமிழ்க் காப்பியங்கள் இயற்றப்பட்ட காலத்திலேயும்கூடக் கண்ண பிரானுக்குக் கோயில்கள் இருந்தமை

புலனாகின்றதன்றி, இராமனுக்குக் கோயில்கள் இருந்தமை புலனாகவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'திருவாசகந்,' 'திருக்கோவையாரி’லுங் கண்ணபிரான் பெயர் மட்டும் ஆங்காங்குக் காணப்படுவதல்லாமல், இராமன் பெயர் ஓரிடத்தாயினுங் காணப்படவில்லை. இன வைகொண்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தென்னாட்டவரால் இராமன் ஒரு தெய்வமாகக் கருதி வணங்கப்படவில்லை யென்பது தானே போதரும். வைணவ சமயத்திற்குரிய பன்னீராழ்வார்களில் முதல்வரான 'பொய்கையாழ்வார்' காலத்திலுங்கூட இராமனது வணக்கம் மிகுந்த பரவாமை யாற்போலும். அவர் தமது திருவந்தாதி'யிற் கண்ணன், வாமனன், வராகன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/129&oldid=1588528" இலிருந்து மீள்விக்கப்பட்டது