உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மறைமலையம் - 23

றைவன்

மலையை அணுவாகவும் கல்லைக் கயிறாகவுங் கயிற்றைக் கல்லாகவும் ஆக்கவல்லான் என்று கூறலாகாதோ? பேராற் றலைப்பற்றிப் பேசுங்காற் சிறுமகாருங்கூட இங்ஙனமன்றோ பேசக் காண்கின் றேம்? இவ்வாறு இறைவனது ஆற்றலை உலகத்தார் வழங்கும் பொதுமுறையில் வைத்துரையாது, 'நரியைக் குதிரை செய்வானும்' என்று சிறப்பு முறையில் வைத்தோதிய தென்னை? என்று ஆழ்ந்தாராய வல்லார்க்குத் திருநாவுக்கரசுகள் ஏனைச் சமயத்தார் போலக் கடவுளை மனமொழிகளுக் கெட்டாதவன், குணங்கள் இல்லாதவன், ன்னனென் றறியப்படாதவன் என்றுமட்டுங் கூறுங் காள்கையினர் அல்லர்; அன்பரல்லார்க்கு அங்ஙனம் எட்டா நிலைமையனாயினும், அன்பராயினார்க்கு அவன் மிகவும் அணியனாய் நின்று அருள்செய்தலையே தனக்கு இயற்கையாக வுடையவன் என்று அவனது அருள்நிலை யினையும் அவ்வருள் நிலையிற் படிந்து அவனுக்கு அணுக்கராய் நிற்கும் அன்பர் நிலையினையும் அறிவுறுக்கும் சைவக் கொள்கையினர்; ஆதலால், அவர் ஏனையோர்போலக் கடவுளை எட்டா நிலைமைக் கண் வைத்து ஓதாது. அவன் தன் அருட்பெருந்தகைமையால் தன் அன்பரையும், ஒரோவொரு காற்பெருந் தீவினையாளரையுங் கூடத், தடுத்தாண்டு அவர்க்குத் தன் அருளை வழங்கிய இவ்வுலகத்து உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, அன்பினால், அகங்குழைந்து அவ்வடியவர்களைப் போல் தமக்கும் அவ்வருட்பேறு கிடைக்கவேண்டுமெனப் பாடுங் குறிப்பே யுடையர். அக்குறிப்பினால், மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் எளியனாய் வந்து நரி பரியாக்கிய தனையும், தாயைப்புணர்ந்த ஒரு பெருந் தீவினையாளனுக்கும் அத் தீவினை யொழித்தமையினையும், பதஞ்சலி புலிக்கான் முனிவர்கட்கு உலகுயிர்களை இயக்குந் தனது இயக்கமாகிய திருக்கூத்தைக் காட்டினமையும், திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பொருட்டு விதையிடாமலே வயல்களில் நெற்பயிர் விளைவித் தமையும் ஆகிய அருட்டிறங்களை அவர் எடுத்தோதினார்.

வவ

பொதுவாக இறைவனுடய அளவிலா ஆற்றல்களைச் சொல்லுதலால் எவர்க்கும் அன்புண்டாகாது; அவன் தன்னடியவர் பொருட்டு எளியனாய் வந்து எவராலுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/13&oldid=1588185" இலிருந்து மீள்விக்கப்பட்டது