உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 23

L

முனிவரர் பலர் இவ்விந்திய நாடெங்கணும் இலங்கையினும் அக்காலத்திருந்தனர் என்பது பெற்றாம். ஓர் அகத்தியர் வடக்கே கோசலநாட்டின்கண் ஓடும் வேதசுருதி யாற்றங்கரையை யடுத்த ஓர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.21 மற்றோர் அகத்தியர் விந்திய மலைக்குத் தெற்கே சேய்மைக்கண் உள்ள கோதாவரி யாற்றங்கரையை யடுத்ததோர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.2 பின்னும் ஓர் அகத்தியர் மலையமலை மேல் இருப்பவராகச் சொல்லப்படு கின்றார்.23 இன்னும் ஓர் அகத்தியர் இலங்கைத்தீவின் தற்ே குஞ்சரமலையி லிருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.24 எனவே, அகத்தியப் பெயர்கொண்ட முனிவரர் பலர் கி.மு. முதல் நூற்றாண்டில் இவ் விந்தியநாட்டினும், இலங்கையினும் இருந்தமை வான்மீகி இராமாயணத்தைக் கொண்டே துணியப்படுதலின், அப்பலருள் தமிழ்நாட்டின் தெற்கே மலையமலைக்கண் வந்து வைகிய அகத்தியரே நக்கீரனாரக்கு வடநூற்பொருள் அறிவுறுத்தின வராதல் வேண்டுமென்றும் தெளிக. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கண் எழுதப்பட்ட 'சிலப்பதிகாரம்,' 'மணிமேகலை'யினாதல், அவற்றிற்கு முற்பட்ட தனிச் செந்தமிழ்த் தொகை நூல்ளினாதல், அகத்தியர் தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்பது ஒரு சிறிதுங் காணப்படா மையின், அவர் அவ்வாறு தமிழில் ஏதும் நூல் யாத்ததில்லை யென்பது தெளியப்படும். உண்மை இவ்வாறிருக்கப் பிற்றை ஞான்று வடமொழியிற் புராண கதைகளைத் தம் மனங்கொண்டவாறு படைத்தெழுதிய பார்ப்பனரே, அகத்தியர் வடக்கிருந்து வந்து தமிழுக்கு இலக்கணஞ் செய்து தமிழை வளம்படுத்தித், தொல்காப்பியர் முதலான மாணாக்கர் பன்னிருவர்க்கு அதனைச் செவியறிவுறுத் தினார் என்று ஒரு பெரும் பொய்க்கதை கட்டிவிட்டார். கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூலாசிரியர் உரையாசிரியர் எல்லாரும் அப் பொய்க்கதையினை மெய்யென நம்பி அதனைத் தம் நூலுள்ளும் உரையுள்ளும் தழீஇ எழுதினார்; ஆகவே, பின் வந்தோர் கூறும் நூலுரை கொண்டு அக்கதை நம்பற்பால தன்றென விடுக்க.

அற்றேற், கி.மு. 380 ஆம் ஆண்டுகட்கு முற்பட்ட ‘அகத்திய ஜாதகத்’தில் ‘அகத்தியர்' என்பார் ஒருவர் வடக்கிருந்து தென் கடலில் உள்ள 'காரைத்தீவில்’25 வந்து தவம்புரிந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/131&oldid=1588538" இலிருந்து மீள்விக்கப்பட்டது