உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அவை

மறைமலையம் - 23

எல்லாங் காணப்புகுதலினும் பெரியதொரு பிழைபாடு பிறிதில்லை. அல்லதூஉம், நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடலும் பிறவும் இன்னார் பொருட்டு நிகழ்ந்தன வென்பது தமிழ்நாட்டிலுள்ளார் எல்லாரும் நன்குணர்ந்தே ராகையால், வ இன்னார் பொருட்டு இயற்றப்பட்டன வென்று வேண்டா கூறாது. அவை இறைவன் அருண்மேலவாதல் ஒன்றையே கருதிப் பாடினா ரென்க. எனவே, இன்னார் பொருட்டென்று பெயர் கூறினுங் கூறாதுவிடினும் அவை அவ்வவ்வடியாரைச் சுட்டாது போதல் இல்லையென்பது பட்டினத்தடிகளும் தம் மகவையரிந்து உணவூட்டிய சிறுத் தொண்டரும் மனையாள் கூறிய ஆணையினால் இளமைக் காலத்தே துய்க்கும்

ன்பத்தைவிட்ட திருநீலகண்டரும், கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பரும் நிகழ்த்திய அரிய அன்பின் செயல்களைமட்டுங் குறிப்பிட்டு,

66

வாளால் மகவரிந் தூட்டவல்

லேன் அல்லன் மாதுசொன்ன

சூளாள் இளமை துறக்கவல்

லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறிற் கண்இடந் தப்பவல்

லேன் அல்லன் நான்இனிச்சென் றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பனுக்கே”

என்று அச் செயல்களைச் செய்த அடியார் பெயர்களைக் கூறாது அருளினமையுங் காண்க. இங்ஙனமே, அடிகளும் “மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளி” என்றும், “பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே" என்றும் பிட்டுத்தந்த முதியோளைக் குறியாது அருளிச் செய்தலும் உற்றுணரற்பாற்று. ஆதலால் ‘தமிழ் வரலாறு' உடையார் நிகழ்த்திய தடை போலியேயாகும். இனி, மாணிக்கவாசகர் “விச்சதின்றியே விளைவு செய்குவாய்” என்று அருளியதும் நந்தனார் பொருட்டு நிகழ்ந்ததையே குறிப்பது; அதனால், நந்தனார், வாதவூரடிகட்கும் முற்பட்டவராதல் பெறப்படும். அது நிற்க.

இனிக் “கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/15&oldid=1588195" இலிருந்து மீள்விக்கப்பட்டது