உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் - 23

உருக்கமான அக் கதைகளிற் சொல்லப்பட்ட கண்ணையும் இராமனையும் உயர்பெருந் தெய்வங்களாக்கி, உயர்ந்த கல்வியறிவும் பகுத்துணர்ச்சியும் இல்லாத் தமிழ்ப் பொதுமக்கள் அக்கதைகளை மெய்யென நம்பி மனங்கரைந்து அவ்விருவரையுமே திருமாலின் அவதாரமென மயங்கிக் கொண்டு வழிபடுமாறும், முழு முதற்கடவுளாகிய சிவபெருமானையும் அவனோடு இரண்டறக் கலந்துநிற்கும் அம்மையாகிய திருமாலையும் வணங்கும் வணகக்கத்தைக் கைவிடுமாறும் செய்துவிட்டனர். இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் எளிய கதைகள் எழுதும் முகத்தாற் ‘சிவம்' என்பது பிறப்பு இறப்பு இல்லா முழு முதற்கடவுளே யாதலைத் தாமும் தமிழ்ப்பொதுமக்கட்குத் தேற்றும் பொருட்டுச், சிவபெருமானுக்குச் சிறந்த அடியவர்களான அரசர்கள் செய்த ஆண்மைச் செயல்களைச் சிவபிரானே செய்தனவாகக் கதைகள் புனைந்து ‘சைவபுராணம்' 'கந்தபுராணம்' முதலிய பல புராணங்களையும் இயற்றி வழங்கவிட்டார்ககள்; சிவபிரான் கோயில்களை நிறைய எடுப்பித்து, அவற்றின்கட் சிறந்த பல திருவிழாக்களும் நடைபெறுமாறு செய்தார்கள்; அக் கோயில்கள் அமைக்கும் முறைகளையும் அவற்றின்கண் வழிபாடு ஆற்றும் முறைகளையும் விரித்துப்,பழைய நாளிலிருந்த தமிழ் ஆகம நூல்களின் பெயராற் ‘காமிகம்’, ‘வாதுளம்', முதலான நூல்களையும் வடமொழியில் எழுதிவைத்தார்கள். இவ்வளவும் தமிழ்ச் சான்றோர்கள் செய்து வைத்தமை யினாலேதான், கண்ணனும் இராமனும் பெரிது வணங்கப் படும் இந்நாளிலுங் கூட முழுமுதற்கடவுளாகிய சிவபிரானை வணங்கும் வணக்கமும் இன்னும் இடையிடையே காணப் படுகின்றது. இங்ஙனம் அவர்கள் செய்துவையாவிட்டால் கண்ணன் இராமன் முதலியோரையும், ஏனைச் தெய்வங்களையும் வணங்கும் வணக்கமே இத் தென்றமிழ் நாட்டிலும் முழுதும் பரவியிருக்கும்.

சிறு

ங்ஙனமாகக் 'கந்தபுராணம் முதலான சைவ புராணங்களை ஆன்றோர்கள் எழுதிவைத்தது, 'பாரதம்’ ராமாயணம்' முதலான கதைகளைக் கேட்டு மக்ளைத் தெய்வமாக மயங்கி வழிபடும் பொதுமக்களை அத்தகைய கதைகளின் வாயிலாகவே மெல்லெனத் திருப்பி முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் வழிபாட்டில் நிறுத்திக் கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/169&oldid=1588601" இலிருந்து மீள்விக்கப்பட்டது