உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் - 23

பொதுவாகவும் தலைதடுமாற்றமாக உரையுரைப்பார் செயலே நகையாடற் பாலதாமன்றி, ஆன்றோர் தொன்று தொட்டுத் திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததாக வழங்கிவரும் நரிபரியான திருவிளையாடலை அவ்வடிகள் பாலதாக

வைத்துரைத்தல்

நகையாடற் பாலதன்றெனத் 'தமிழ் வரலாறுடையார்' உணரக்கடவராக.

இனி, ஆழ்ந்ததொரு நீர்நிலையில் அகப்பட்டு ஏதொரு பற்றுக்கோடுங் காணாது உள்ளமிழ்ந்துவோன் தத்தளித்துத் தன்னருகே மிதந்ததொரு சிறு துரும்பை விரைந்து கைப் பற்றினாற் போல, ‘நரியைக் குதிரை’ செய்தானும் என்று இறந்த காலத்தில் ஓதாது 'செய்வானும்’ என்று எதிர்காலச்

சொல்லால் அப்பர் அருளிச்செய்தமையானே, அஃது அவர் காலத்திற்கு முன்னே நடந்ததென்று கொள்ளுதற்கிடமில்லை யெனத் ‘தமிழ் வரலாறு' உடையார் கூறினர். நரியைக் குதிரை செய்தல் அப்பர்க்கு முன்னே நடந்ததில்லையாயின் தமக்குப் பிற்காலத்தே நடக்கப் போவதனை முன்னறிந்து அப்பர் அருளிச்செய்தாரென வரலாற்று நூற்புலவர் எவரேனும் ஒப்புவரா? “புன்சடை, பின்தயங்க வாடுவாய்” என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவாலவாய்த் தேவாரத்திற் போந்த ‘ஆடுவாய்' என்னுஞ் சொல்லுக்கும் இனிமேல் ஆடுவாய்' என்பது பொருளாகுமா? தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே பதஞ்சலி முனிவர் பொருட்டு இறைவன் வெள்ளியம்பலத்தில் திருக்கூத்து இயற்றினதனை யன்றோ' திருஞானசம்பந்தர் அங்ஙனம் “புன்சடை பின்தயங்க ஆடுவாய்” என்று எதிர்காலச் சொல்லின் வைத்து ஓதினார். இவ்வாறு இறந்தகாலத்தில் நிகழ்ந்த தொன்றனை எதிர் காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர் காலத்தின் நிகழற்பால தொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ்வழக்கின் உண்மை.

“இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ்

சிறப்பத் தோன்றும்மயங்குமொழிக் கிளவி”2

6

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினமை கொண்டு அறியப்படும். இச் சூத்திரத்திற்கு உரைவகுத்த சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். "இவர் இவர் பண்டு பண்டு இப்பொழிலகத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/17&oldid=1588204" இலிருந்து மீள்விக்கப்பட்டது